02-25-2006, 01:34 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு அங்கம் 19</b></span>
பொண்ணம்மா : உங்களுக்கென்ன நிம்மதியா நல்லா நீட்டி நிமிந்து கிடவுங்கோ
முகத்தார் : என்னடியப்பா சும்மா சரியக் கூட விடமாட்டியே
பொண்ணம்மா : நேற்று உங்களிட்டை என்ன சொன்னான் புதன் கிழமை கொழும்புக்கு போக வேணும் சீலன்ரை வானுக்குச் சொல்லச் சொல்லி எல்லோ
முகத்தார் : இப்ப என்னத்துக்கு திடீரெண்டு கொழும்புக்கு
பொண்ணம்மா : சரியாப் போச்;சு வயசுபோனா அறளை பேந்துபோகும் எண்டது உண்மைதான் அதுதானப்பா தம்பி ராசன் பிரான்ஸ்சிலை இருந்து வாறனெல்லோ ஏயாப்போட்டிலை போய் கூட்டியற வேண்டாமே. . . .
முகத்தார் : அவன் வரச் சொல்லி சொல்லேலையே எதாவது ஒழுங்குகள் செய்திருப்பான்
பொண்ணம்மா : அவன் சொல்லாட்டிக்கு போகப்பிடாதே 10 வருஷம் வெளியிலை இருந்து வாறவனை கூப்பிடப் போகாட்டி ஊருக்கை என்ன கதைப்பினம்
முகத்தார் : போகேக்கை இந்த உருக்கத்தை காணேலை இப்ப வருகுது அதுசரி அவனுக்கு பேசி வைச்சிருக்கிற சம்மந்தபகுதி கொழும்பிலைதானே இருக்கினம் எப்பிடியும் அவைக்குச் சொல்லியிருப்பான்
பொண்ணம்மா : லூசாப்பா நீங்க பேசித்தான் வைச்சிருக்கு இன்னும் சம்மந்தம் கலக்கேலையே அவையை போகவிட்டா ராசன் கொண்டு வாறதெல்லாத்தையும் அப்பிடியே அமத்திப் போடுவினம்
முகத்தார் : அப்ப நீர் போய் அமத்தப் போறீர் வயசுபோண நேரத்திலை ஏன் அலைச்சல் எண்டு சொல்ல வந்தன்
பொண்ணம்மா : நீங்க வராட்டி நில்லுங்கோ நான் போறன் சம்மந்தி மாணிக்கத்தாரின்ரை குணம் உங்களுக்குத் தெரியாது ஏயாப்போட்டுக்கே பெடிச்சியை கொண்டு போய்க் காட்டி அப்பிடியே வறுகிப் போடும் மனுசன்
முகத்தார் : அதுவும்சரிதான் உன்ரை தம்பியும் பெம்பிளையைக் கண்டா என்ன செய்யிறதெண்டு தெரியாது இஞ்சையே எத்தினை பிரச்சனைகள் காட்டினவன்
பொண்ணம்மா : சும்மா எதுக்கு பழசுகளை கிளறீங்கள் இப்ப அவன் வெளிநாட்டு மாப்பிளை
முகத்தார் : கொழும்பிலை போய் எங்கையப்பா தங்கிறது மாணிக்கத்தின்ரை வீட்டுக்கு போவமோ
பொண்ணம்மா : சா. . சா. . அங்கை போனா எங்கடை டிமான்ட் குறைஞ்சிடாது பேசாம ஒருநாள்தானே லொஜ்சிலை தங்குவம்
முகத்தார் : ஏதோ ஆட வெளிக்கிடுறீர் நானும் சேந்தாடவேண்டிக்கிடக்கு வானுக்கு சொல்லிப்போட்டு வாறன்
<i>(அடுத்தநாள் மாலை வான் ஒண்டு முகத்தார் வீட்டில் வந்து நிக்கிறது அதிலிருந்து ராசனும் இன்னொரு பெண்ணும் இறங்கி வருகினம்)</i>
பொண்ணம்மா : உங்கை பாருங்கோ ராசன் வாறான். அது ஆர் பக்கத்திலை மாணிக்கத்தாற்ரை பெடிச்சி சுமதி போலக் கிடக்கு
முகத்தார் : எனக்கு அப்பவே தெரியும் உன்ரை தம்பி என்ன வேலை செய்திருப்பான் எண்டு
பொண்ணம்மா : ஒரு பிளானோடைதான் மாணிக்கத்தார் பெடிச்சியையும் சேத்து அனுப்பி வைச்சிருக்கிறார்
முகத்தார் : பிளான் இல்லையடி உன்ரை தம்பின்ரை குணம் தெரிஞ்ச மனுசன்
தனிய விட்டா ஊருக்கை என்ன செய்வான் எண்டு மனுசனுக்குத் தெரிஞ்சிருக்கு
பொண்ணம்மா : இதெல்லாம் நான் இருக்கேக்கை எப்பிடி நடக்குதெண்டு பாக்கிறன்
தம்பி ராசன் எப்பிடியடா இருக்கிறாய் இப்பிடி இழைச்சுப் போட்டியே?
முகத்தார் : இந்தா போனதைவிட 2மடங்கா வந்திருக்கிறான் இழைச்சுப் போட்டான் எண்டு சொல்லுறாய்
ராசன் : எப்பிடி அக்கா இருக்கிறீயள்?? இரண்டுநாள் முன்னுக்கு வரக் கிடைச்சுது உங்களுக்கு என்னத்துக்கு கஷ்டம் எண்டுதான் நானே வந்திட்டன்
பொண்ணம்மா : வாங்கோ பிள்ளை என்ன அப்பர் தனிய அனுப்பியிருக்கிறார் சும்மா சம்மந்தம் தான் பேசியிருக்கு ஊருக்கை பாத்தா வடிவில்லைத்தானே. .
ராசன் : அக்கா என்ன இன்னும் பழைய காலத்திலையே இருக்கிறீயள் இப்பத்தைய காலத்திலை கலியாணத்துக்கு முன்னம் ஆண்ணும் பெண்ணும் பழகினால்தான் ஒருவரை ஒருவர் சரியா புரிஞ்சு கொள்ள முடியும்
முகத்தார் : அது வாஸ்தவம் தான் தம்பி ஆனா ஒருவர் ஒருவற்றை மனசை புரிஞ்சு கொள்ளுங்கோ எண்டா பெடியள் எல்லாத்தையும் எல்லோ புரிஞ்சு கொள்ள நிக்கினம்
ராசன் : இதுக்குத்தான் அக்காவை சொன்னான் ஒருக்கா உங்களையும் கூட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு வந்து அந்தக் கலாச்சாரங்களை பாக்கச் சொல்லி இது இங்கே அடைஞ்சு கிடந்து கொண்டு உலகம் விளங்காம நிக்கிறீயள்
முகத்தார் : தம்பி இப்பிடிச் சொல்லித்தான் இஞ்சையும் ஆட்கள் காதல் கலியாணம் திறம் என்;கிறவை பிறகு பாத்தால் இரண்டு மூண்டு வருஷத்திலை கவிழ்ந்து போய் கிடக்குது
பொண்ணம்மா : ராசன் நீ ஆம்பிளையடா வெளிநாட்டு பிளானிலை நாலு பெட்டையளோடை பழகிட்டு வந்தாலும் டிமாண்ட்தான் மாணிக்கத்தாருக்கு எங்கை அறிவு போட்டுது பிள்ளையை தனிய அனுப்பிறதுக்கு
முகத்தார் : இஞ்சை பாற்ரா அக்காச்சி சொல்லுற புத்திமதி வந்த பிள்ளையை வைச்சுக் கொண்டு கதைக்கிற கதையை முதலிலை பிள்ளைக்கு ஏதன் குடிக்கக் குடுமன்
பொண்ணம்மா : இல்லையப்பா பிள்ளையை நான் பேசேலை கல்யாணம் முடியாமல் இரண்டு பேரையும் பழகவிடுகிறது நம்மடை ஊருக்கு புதிசா எல்லோ கிடக்குது
ராசன் : அக்கா இஞ்சை ஊரிலை இருக்கிற ஆட்கள்தான் இன்னும் மாறமல் கிடக்கிறீயள் இப்ப வெளியிலை எங்கடையாட்கள் கலியாணம் முடிக்காமல் குடும்பம் நடத்தி பிள்ளை பிறந்தாப் பிறகே தாலிக்கட்டினம் இந்த விதத்திலை கொழும்பிலை இருக்கிற ஆட்களே மாறியிட்டினம் நீங்கள்தான். . . .
முகத்தார் : இஞ்சரும் இப்ப பெண்ணைப் பெத்தவையும் கொழும்புவாசிகள்தானே அவையே யோசிக்காமல் பிள்ளையை அனுப்பியிருக்கினம் நீர் ஏன் குதிக்கிறீர்
ராசன் : சரி அக்கா. கதையை விடு . ஒரு அட்டியல் கொண்டு வந்தனான் சுமதிக்குக் குடுப்பம் எண்டு ஒருக்கா பார்
பொண்ணம்மா : (தன்ரை கழுத்தில் வைத்து பாத்துவிட்டு) சா. . .நல்லாத்தான் இருக்கு அட்டியல்
முகத்தார் : அட்டியல் நல்லாத்தான் இருக்கு ஆனா கழுத்து வடிவில்லையே அப்பிடியே கழட்டிக் குடுத்திடம்மா. .
பொண்ணம்மா : வேண்டியும் தர மாட்டியள் ஆசைக்கு வைச்சுப்பாத்தாலும் உங்களுக்குப் பொறுக்காது
முகத்தார் : எனக்கு தெரியுமப்பா உம்மடை குணம்
ராசன் : அக்கா சரியான அலுப்பாக்கிடக்கு முதலிலை குளிச்சிட்டு வாறன் நல்ல தேத்தண்ணி ஒண்டு போட்டுத் தா பாப்பம்
<i>(சுமதியையும் கூட்டிட்டு சமையலறைக்கு போற பொண்ணம்மா )</i>
பொண்ணம்மா: பிள்ளை உமக்கும் தேத்தண்ணி போடுறன் நீரும் குளிச்சிட்டு வாருமன்
சுமதி : பாத்றூம் எங்கையன்ரி இருக்கு?
பொண்ணம்மா: பிள்ளை பாத்றூம் இல்லை கிணத்தடிதான் உந்தச் சட்டையோடையே குளியும்
சுமதி : ஜயோ என்ன அன்ரி எனக்கு பாத்றூமிலை குளிச்சுத்தான் பழக்கம் இதென்ன முத்தவெளியிலை குளிக்கச் சொல்லுறீயள்
பொண்ணம்மா: பிள்ளை முந்தி நீங்க 18வயசுமட்டும் வடலியடைப்புக்கை இருக்கேக்கை பொது கிணத்திலைதான் குளிக்கிறதெண்டு அம்மா சொன்னா இப்ப 3 வருஷம் கொழும்புக்கு போணவுடனை எல்லாம் மறந்து போச்சே அங்காலை வெறும் வளவுதான் ஒருதரும் பாக்கமாட்டினம் போய் குளியும்
<i>(சுமதி குளிக்கப் போக முகத்தாரிடம் வருகிற பொண்ணம்மா)</i>
பொண்ணம்மா: இஞ்சரப்பா இண்டைக்கு நீங்க விறாந்தேலை படுங்கோ என்ன
முகத்தார் : ஏனப்பா என்ன நடந்தது?
பொண்ணம்மா: ஒரு அறைக்கை நானும் சுமதியும் படுக்கிறம் மற்ற அறைக்கை ராசன் படுக்கட்டும் கலியாணம் முடியும் மட்டும் கண்ணுக்கை எண்ணெயை ஊத்திக் கொண்டிருக்கனுமப்பா மாணிக்கத்தாரை ? நானா எண்டு பாக்கிறன் பேசாமல் நான் சொல்லுறதைக்கேட்டு நீங்க வெளியிலை படுங்கோ என்ன
முகத்தார் : கடைசிலை படியிலை காவலுக்கு படுக்கிற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திட்டாய் சரி. . .சரி. . .
[b]முற்றும் :roll: :roll:

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>