02-25-2006, 12:12 PM
இளைஞன் Wrote:கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள்.
"வாலி போடுவார் அவளுக்கு வேலி" என்கிற வரிகளின் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? கவிதைக்கு வேலி போட முடியுமா? வாலி என்கிற சொல்லுக்காக வேலியை பயன்படுத்தியிருக்கிறீர்கள், ஆனால் கருத்து பொருத்தமாக இருக்குமா என்பது குழப்பமாகவே உள்ளது.
நன்றி.
அந்த வார்த்தைகள் எதுகைமோனைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒவ்வொருகவிஞனும் கவிதை தம் வசப்படவேண்டும் என்றே விரும்புகிறான் எழுதுகிறான், எமதுகாணியை சுற்றி வேலிபோட்டால் அது எமக்கு சொந்தம், காணிக்குபோடலாம் கவிதைக்கு போடலாமா? போட்டாலும் அது அடங்குமா? என்பதுதான் நான் சொல்லவந்த கருத்து.
உங்கள் கருத்துக்கு நன்றி இளைஞன்.
.
.
.

