02-25-2006, 09:28 AM
Nitharsan Wrote:ஊமையவர்களே! நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது போல் இதுக்கு பேர் தாள்வு மனப்பாண்மையே தான். தங்களால் எதுவுமே செய்யமுடியாது எண்றும் மற்றவர்களாலும் அதைச்சாதிக்க முடியாது எண்றும். எதிர்மறையான கருத்துக்களை எப்போதுமே ஜதார்த்தம் என்கின்ற பேரில் பரப்புபவர்கள். எல்லா ஜதார்த்தங்களும் எல்லாவிடத்திலும் பலிப்பதில்லை
முதல்தரம் ஆ.க.வெ பின் பலபேர் சொன்னார்கள் ஆனையிறவுகூட பலமான முகாம் தாக்கி அழிக்கிறது நடவாத காரியம் எண்று. அதை முயலாமல் முடியாது எண்று போசாமலே இருந்திருக்கலாம் ஜதார்த்தம் என்கின்ற பெயரால்.
ஆனால் அப்படி இருக்காதவர்கள் ஜதார்த்தவாதிகள் பட்டியலில் வரமாட்டார்கள்தான். அவர்கள் சாதனையாளர்கள். சிலர் தங்களின் இயலாமையை மறைக்க போடும் வேடம்தான் "ஜதார்ர்தவாதி" என்கின்ற பெயர்.
அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான். அல்லது ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கலாம்.

