02-25-2006, 07:55 AM
ஊமையவர்களே! எது அகதி காசு என்று புரியவில்லை. நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள். தமிழரின் இவ்வாறான சிந்தனைகளால் தான் தமிழன் இப்படியே இருக்கிறான். அகதி காசு என்பது உங்களுக்கு நீங்கள் இருக்கும் நாட்டு அரசாங்கங்களால் இனாமாகவா வழங்கப்படுகின்றது? ஒவ்வொரு தமிழரின் வியர்வைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைக்கின்ற சம்பளமே அவை. ஏதோ வேற்று நாடு வந்தோம்..அகதி அந்தஸ்து கேட்டோம் கிடைத்து விட்டது. அகதி அந்தஸ்தை தந்தவர்கள் எம்மை குடிவரவாளர்கள் (imigration) என்கிறார்கள் நாங்கள் நம்மை அகதி (refugee) என்கின்றோம் இது தான் எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தரப்பு கருத்துக்களில் இருந்து தான் இங்கே பதில் எழுதுகின்றனர். என்னை பொறுத்த வரை தாயகத்தில் அமைதி வருகிறதா இல்லை என் படிப்பு முடிய நிச்சயம் அங்கு மீள செல்லுவேன். ஆனால் தூயவனை பொறுத்த வரை அவருக்கு வெள்ளை த் தோல் தான் பிடிக்கும் என்றால் அவர் தாராலமாக இங்கே இருக்கலாம். யாரும் யாரையும் இங்கே கட்டாயப்படுத்த வில்லை. விரும்பினால் நீங்கள் போகலாம் விரும்பாவிட்டால் இருக்கலாம். அதற்காக நீங்கள் செய்தவற்றை கொண்டு மற்றவர்களை எடை போடுவது தவறு. சிலருக்கு நாடு திரும்ப விரும்பபம் இருந்தாலும் சூழ்நிலை அனுமதிக்காது. எல்லாவற்றையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

