02-25-2006, 12:54 AM
அகிலன் Wrote:நேர்மையாக ஐரோப்பாவில அரசாங்கத்துக்கு 80% மான உண்மையான உழைப்பை வரியாகவும், பில்லுகளாகவும் குடுப்பினம். அதோட வாடகையும் சேத்து குடுப்பினம் . இங்க வெள்ளைக்காறனின் அரசாங்கத்துக்கு குடுக்கிறது கௌரவம் இல்லையா.?
ஆனால் ஊரில காவல் காக்கிறதுக்கு ஏற்படும் செலவாய் கொஞ்சம் கேட்டால் ஒப்பாரி வைப்பினம். எல்லாத்தையும் ஓசிலயே வாங்கின சனம் பாருங்கோ. எங்களுக்கு யார் வீட்டுப்பிள்ளையாவது உழைச்சுபோட்டால் சப்புக்கொட்டி சாப்பிடுவம், எங்களிட்ட காசும், போராட பிள்ளைகளையும் கேக்ககூடாது பிறகு நாங்கள் பொல்லாதவை ஆகீடுவமில்லை.
.
தம்பி அகிலம் கொஞ்சம் பொறுமோனை. தனக்கடங்கிதான் தானம் என்பர். இங்கு உழைப்பவன் தனக்கே பணத்துக்கு கஸ்டப்படும் போது எப்படியப்பா தானம் செய்வது. உங்களிடம் மேலதிகமாக இருந்தால் கொடுங்கள் என்னிடம் இருந்ததால் நானும் ஏதோ சிறிதாய் கொடுக்கிறேன். அட பாவம் இல்லாதவன் என்ன செய்வான்.

