Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல்
#3
மானிப்பாய் மகளிர் கல்லூரியின் 150 மாணவிகள் திடீர் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதி

பறவைக் காய்ச்சல் அல்ல என்று மருத்துவர்கள் உறுதியாக அறிவிப்பு

மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அதேநேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியை அடுத்தே சுமார் 150 மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மட்டும் 75 ற்கும் மேற்பட்ட மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கடந்த 17 ஆம் திகதி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அன்றைய தினம் அங்கு வந்திருந்த பெருமளவு மாணவிகள், அங்கு விற்கப்பட்ட ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பானங்களை வாங்கிச் சுவைத்துள்ளனர்.

இந்த உணவுப் பண்டங்களைச் சுவைத்த மாணவிகளுக்கு மறுநாள் முதல் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்றவற்றால் இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் பெற்றோரின் உதவியுடன் பல்வேறு தனியார் மற்றும் பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனால், கடந்த திங்கட்கிழமை பாடசாலையில் மாணவிகளின் வரவு பெரிதும் குறைந்து காணப்பட்டது. பாடசாலைக்கு வந்திருந்த மாணவிகளில் பலரும் பல்வேறு உடல் உபாதைகளால் சிரமமடைந்ததை ஆசிரியர்கள் அவதானித்துள்ளனர். இது பற்றி பாடசாலை அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்த அதிபரும் ஆசிரியர்களும், அனைவரையும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விளையாட்டுப் போட்டிக்காக பாடசாலைக்கு வந்திருந்த 12 முதல் 18 வயது வரையான மாணவிகளே இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.

பெருமளவான மாணவிகள், இவ்வாறு ஒரே நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால், வைத்தியசாலை இரண்டாம் இலக்க விடுதி, பாதிக்கப்பட்ட மாணவிகளால் நேற்று நிரம்பி வழிந்தது.

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் உடனடியாக அதிதீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். இவர்களது இரத்த மாதிரிகளும் பெறப்பட்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பெருமளவான மாணவிகள் ஒரே நேரத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட சம்பவம் பாடசாலை மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சலல்ல

இம் மாணவிகளுக்கு ஏற்பட்டிருப்பது பறவைக் காய்ச்சல் அல்ல என்பதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சலுக்குரிய சிகிச்சையையே வழங்கி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இம் மாணவிகளது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும் இதுவரை இது தொடர்பாக மருத்துவ அறிக்கை பெறப்படவில்லை.

இம் மாணவிகளுக்கு, உணவு நஞ்சூட்டப்பட்டதால் இப் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் சிலர் பயத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சையளிக்கும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

தினக்குரல்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by adsharan - 02-24-2006, 09:09 AM
[No subject] - by sri - 02-24-2006, 09:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)