Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல்
#2
மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதாரண வைரஸ் காய்ச்சலாலேயே பீடிக்கப் பட்டுள்ளனர். அவர்களைப் பறவைக் காய்ச்சல் பீடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று யாழ். தாய், சேய்நல அதிகாரி டாக்டர் சி.எஸ்.சொலமன் உதயனுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிடுகை யில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளை பரிசோதனை செய்தோம்.
அவர்கள் ஒருவகை வைரஸ் காய்ச்சலுக்கே இலக்காகியுள்ளனர். உடலுக்கு ஒவ்வாமையான பொருள்களை உட்கொண்டிருந்தாலும் இத்த கைய காய்ச்சலால் பீடிக்கப்படலாம்.
நஞ்சுப் பதார்த்தம் உள்ள உணவை உட் கொள்வதன் மூலம் ஏற்படும் காய்ச்சலாக இது இருக்காது.
பறவைக் காய்சலுக்கான அறிகுறி மற்றும் புறநிலைகள் காணப்படவில்லை.
ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் என்ற முடிவுக்கே வந்துள்ளோம் மாணவிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டுள்ளன. அவற்றின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும் என்றார் அவர்.
http://www.uthayan.com/pages/news/today/21.htm
Reply


Messages In This Thread
[No subject] - by adsharan - 02-24-2006, 09:09 AM
[No subject] - by sri - 02-24-2006, 09:34 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)