Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல்
#1
காய்ச்சல் மற்றும் வாந்தி உபாதைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி யின் 50 மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் மானிப்பாய் பகுதியில் பதற்ற மானதும் அதே பரபரப்பானதுமான சூழ் நிலை நிலவியது
அதேவேளை, காய்ச்சல் மேலும் பரவு வதைத் தடுக்கும் நோக்குடன் கல்லூரியை இன்றுமுதல் தற்காலிகமாக மூடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலையிடி, வாந்தி போன்ற உபா தைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் அம்புலன்ஸ் மூலம் கூட்டிவரப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டனர்.
திடீரென ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து கல்லூரி அதிபர் திருமதி ஜெயவீரசிங்கத்தி டம் கேட்டபோது அவர் கூறியதாவது:
எமது கல்லூரியில் கடந்த வெள்ளிக் கிழமை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி இடம்பெற்றது அதன்பின்னர் கடந்த சில தினங்களாக பல மாணவிகள் காய்ச்சல், தலையிடி, வாந்தி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி நோயால் பலர் வயது வேறுபாடின்றி தரம் ஒன்று முதல் உயர்தர வகுப்பு வரையான மாணவிகளை பீடித்துள்ளன. நேற்றுக் காலை வழமைபோல் நடைபெற்ற இறைபிரார்த்தனை யின்போது ஒருசில மாணவிகள் மயக்கமடைந் தனர். அதனைவிட வகுப்பில் அநேகமான மாணவிகள் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த ஒருவகைக் காய்ச்சல் குணம் குறி காணப் பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கென மானிப்பாய் சுகாதார வைத் திய அதிகாரியிடம் தொடர்புகொண்டோம்.
பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பரிசோதகர்கள் பலர் கல்லூரிக்கு வருகை தந்தனர் அவர்கள் பாதிக்கப்பட்ட 36 மாண விகளை அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
ஏனைய 40 மாணவிகள் கல்லூரி மண்ட பத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வைத்தி சாலைக்குக் கொண்டுசென்ற மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் அது ஒருவித வைரஸ் காய்ச் சல் என்றும் கூறப்பட்டது.
இதன் பின்னர் கல்லூரியில் தடுத்துவைக் கப்பட்டிருந்த மாணவிகள் வீடுசெல்ல அனு மதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச் சைக்குட்படுத்தப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார்.
பீதிகொள்ளத் தேவையில்லை
மாணவிகள் நோய்வாய்ப்பட்டது தொடர் பாக மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோத கர் எஸ்.எல்.ஜெபராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததா வது:
இது ஒரு வைரஸ்தொற்றினால் ஏற்பட்டி ருக்கும் காய்ச்சல் என்று மருத்துவ அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து எந்த வித பீதியும் கொள்ளத்தேவையில் என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதி மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ் வரன் கருத்துத்தெரிவிக்கையில்:
இந்தக் காய்ச்சல் தொடர்பாக எவரும் பீதி கொள்ளத் தேவையில்லை. இது ஒரு சாதாரண காய்ச் சலே. இது தொடர்பான தடுப்பு நடவடிக் கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற் கொண் டுள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவித் துள்ளோம் என்றார்.

http://www.uthayan.com/pages/news/today/20.htm
Reply


Messages In This Thread
மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் - by adsharan - 02-24-2006, 09:08 AM
[No subject] - by adsharan - 02-24-2006, 09:09 AM
[No subject] - by sri - 02-24-2006, 09:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)