02-24-2006, 03:21 AM
ஊரிலே என்னை -
பள்ளன் பறையன் என்றார்கள்.
குறைந்த சாதி - தள்ளிப் போ
நானும் வெளிநாடு வந்தேன்.
இங்கே என்னை கறுப்பன், பாக்கி
என்றார்கள் - நானும்
முடியட்டும் சண்டை - போகிறேன்
ஊருக்கு என்றிருந்தேன்.
சண்டையும் நின்றது -
சமாதானம் என்றார்கள் - நானும்
கட்டினேன் பெட்டியை
ஏறினேன் விமானம் - எந்தன் நாட்டுக்கு
அகதியாய் வந்தவனை - ஆள் மாறி ஆள்
கேளாத கேள்வி கேட்டார்கள் - இங்கே
எந்தன் நாட்டிலுமா?? - கேளாத கேள்விகள்!!!!!
விடுதலை வரி கட்டினீங்களா?
இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை
அங்கே என்ன வேலை? -
கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில
இங்கே என்ன செய்யிற நோக்கம்?
தெரிஞ்ச வேலை உது தானோ?
எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!
நாட்டுக்கு உங்களால என்ன பயன்?
ம்.... கேளாத கேள்விகள்...
கேட்டால் என்ன செய்வேன்?
பள்ளன் பறையன் என்றார்கள்.
குறைந்த சாதி - தள்ளிப் போ
நானும் வெளிநாடு வந்தேன்.
இங்கே என்னை கறுப்பன், பாக்கி
என்றார்கள் - நானும்
முடியட்டும் சண்டை - போகிறேன்
ஊருக்கு என்றிருந்தேன்.
சண்டையும் நின்றது -
சமாதானம் என்றார்கள் - நானும்
கட்டினேன் பெட்டியை
ஏறினேன் விமானம் - எந்தன் நாட்டுக்கு
அகதியாய் வந்தவனை - ஆள் மாறி ஆள்
கேளாத கேள்வி கேட்டார்கள் - இங்கே
எந்தன் நாட்டிலுமா?? - கேளாத கேள்விகள்!!!!!
விடுதலை வரி கட்டினீங்களா?
இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை
அங்கே என்ன வேலை? -
கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில
இங்கே என்ன செய்யிற நோக்கம்?
தெரிஞ்ச வேலை உது தானோ?
எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!
நாட்டுக்கு உங்களால என்ன பயன்?
ம்.... கேளாத கேள்விகள்...
கேட்டால் என்ன செய்வேன்?
''
'' [.423]
'' [.423]

