02-24-2006, 02:38 AM
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் மத்தியில் தாம் புலம் பெயர்ந்து வாழ்வதா அல்லது புலத்தில் வாழ்வதா என்பதில் வேறு வேறு கருத்துக்கள் காணப்படலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் பலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்பாகப் பாவித்து எழுதப்பட்ட கருத்துக்களினால் தானே தவிர வேறில்லை. நானே அல்லது வேறு ஒருவரோ புலத்தில் வாழ்வதா அல்லது புலம் பெயர்ந்து வாழ்வதா என்பது எனது தனிப்பட்ட முடிவு. அதனை தடுக்க யாராலும் முடியாது. அதற்காக எனது அல்லது இன்னுமொருவரது சூழலை வைத்து அல்லது மன நிலையை வைத்து அப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னைப்பற்றிய முடிவு பற்றியே என்னால் கூறமுடியும். இன்று பல புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடம் இரு கருத்துக்களும் நிலவுகின்றன.
சிலர் தாயகம் சென்று வாழ ஆவலுடன் இருக்கிறார்கள். சிலர் இல்லை நாம் அங்கு செல்லவில்லை. அதைவிட நாம் தமிழருடன் இணைந்து வாழவே விரும்பவில்லை என்று தமிழர்கள் இல்லாத ஒரு சூழலைப்பார்த்து அங்கு வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இப்படி பல காரணங்கள் காணப்படலாம். புலம் பெயர்ந்து பல மாணவர்கள் தாம் தமது சொந்த தாய் மண்ணிற்கு போய் பணியாற்றவேண்டும் என்று விருப்புடன் இருக்கிறார்கள். இப்படியானவர்களையும் உங்கள் கருத்துக்களால் நீங்கள் காயமடைய வைக்கிறீர்கள். ஆதலால் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களால் ஒரு சமூகத்தின் வாழ்வை அஸ்தமனமாக்காது தொடர்ந்து வளமான கருத்தாடலைத் தொடர்வது நன்மை பயக்கும்.

<b>
...</b>
...</b>