02-24-2006, 02:26 AM
rajathiraja Wrote:<b>திரு காவடி
புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி</b>
http://www.rediff.com/news/2005/dec/15bihar.htm
காவடி Wrote:தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் ஏ.கே. மித்ரா கூறியதாவது:
மாவோயிட் ஆயுதக் குழுவினரது பிரச்சனை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. அது பயங்கரவாதம் மற்றும் மாநிலங்களிடையேயான பிரச்சனையும் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதக் குழுவினர் வைத்திருந்த 650 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்மாநிலத்தில் மாவோயிட் ஆயுதக் குழுவினரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் படையணிகளும் குவிக்கப்பட்டுள்ளன என்றார் மித்ரா.
நீங்கள் இனிமேல் வைக்கின்ற எவ்வித குற்றச்சாட்டுக்களிற்கும் நாம் பதில் அளிக்க தேவையில்லை தானே? அத்துடன் உமது நாட்டு செய்திகளை வைத்து எவ்வித முடிவுகளையும் எடுக்கமாட்டோம்.....
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

