02-04-2004, 09:54 AM
திரு.மொகமட் அவர்களது கருத்துகளுக்கு நான் பதில் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
காரணம் நீங்களே இன்னொருவரிடம் கேட்டுத்தான் கருத்துகளை முன் வைக்கிறீர்கள். உங்களுக்கும் பிரச்சனைகள் புரியாமலிருக்கிறது.
நிகழ்ச்சி நடை பெற்றது தேசம் பத்திரிகையால் அல்ல அது மாற்று படம் சம்பந்தப்பட்டவர்களால் என்பதும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று படம் சம்பந்தப் பட்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
சில தொலைக்காட்சிகள் சிலரது தயாரிப்புகளுக்கு இறுதியில் தமது தயாரிப்பு என்று டைட்டில் போடுவதை கண்டு அதை நிறுத்தியிருக்கிறேன். காரணம் அப் படைப்புகள் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருபவை. அவற்றை இங்கு ஒளிபரப்பும் போது அவர்களால் பார்க்க முடிவதில்லை. எனவே அவர்களது உழைப்பு அவர்களுக்கு தெரியாது களவாடப்படுகிறது.
இது போலவே யாழில் எழுதப்பட்ட ஒரு விடயம் , ஒருவரது கதை, இலங்கை பத்திரிகையொன்றில் இன்னொருவரது பெயரில் வெளிவந்தது. அதுவும் முடிந்து போன விடயமாகவே ஆகியது. இவை நடந்து முடிந்து விட்டதால் தடுக்க முடியவில்லை.
ஆனால் இங்கே, இறுதி நேரத்திலாகிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தேசம் பத்திரிகையாளர் நியாயமானவராக இருந்தால் அவர் இது பற்றி அக் குறும்படங்களின் இயக்குனர்களது அல்லது தயாரிப்பாளரது அனுமதியைப் பெற்று அதன் பின் கொடுத்திருக்க வேண்டும். அவர் ஆதரவு கொடுத்தார் என்பதற்காக அது அவருடயதாகாது. இங்கு அவரது பத்திரிகைகளை அனுப்பிய போதெல்லாம் நான் அவற்றை விநியோகித்துள்ளேன். இதுவும் ஒருவிதத்தில் ஆதரவுதான். அதற்காக தேசம் பத்திரிகையின் தலைப்பில் உள்ள பெயரைத் தூக்கி விட்டு எனது பெயரைப் போட நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்?
அடுத்து மாற்று குழவினர் நடத்திய விழாவுக்கு வரும் படங்களை பார்க்காமலே அது பற்றிய எதுவித விபரங்களை தெரிந்து கொள்ளாமல் கிடைத்த குறும்படங்களை ஒரு முறையாவது பார்க்காமல் இறுதி நேரத்தில் திரையிட நினைத்திருக்கிறார்கள்.
சினிமாவின் வளாச்சிக்காக துடிக்கும் இளைஞர்கள் அவர்கள் திரையிடப் போகும் குறும்படங்கள்
(1) தரமானவையா?
(2) திரையிடலுக்கு தகுதியானதா?
(3) யாருக்கான உரிமை கொண்டது
என்பவை கூட தெரியாமல் இருந்தது கவலைக்குரியது.
<span style='font-size:22pt;line-height:100%'>இதனிடையே அக் கலைஞர்களை கௌரவித்ததாக கூறுகிறீர்கள். படத்தை பார்க்காமல் எவரை கௌரவிக்க நினைத்தீர்கள்?
படத்தைக் கொண்டு வந்து தந்தவரையா? அல்லது படைப்பாளிகையா?</span>
இந்நிகழ்வை நடத்தியவர்கள் படித்தவர்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் விமர்சனங்கள் செய்து வரும் கல்விமான்கள்.
இப்படியானவை இனியும் தொடரக் கூடாது என்பதே எனது ஆதங்கம். இன்னொருவரது படைப்பை அவர்களது அனுமதியின்றி மலினப்படுத்தும் எவருமே உண்மைக் கலைஞர்களாக முடியாது.
தவிரவும் எவருக்கும் அஞ்சி வளைபவர்கள் சுயநலவாதிகளேயன்றி நேர்மையானவர்களல்ல. இவர்களால் ஒரு போதும் நிலைத்து நிற்க முடியாது.
யாரும் எழுதட்டும் இது பொது வாழ்வு சம்பந்தப்பட்ட நிகழ்வு. இங்கே நேர்மை அவசியம்.
நீங்கள் நீதிபதியானால்
தந்தை குற்றவாளிக் கூண்டில் இருந்தால் நீதி வழங்குவீர்களா அல்லது தந்தையென்பதற்காக மன்னிப்பீர்களா?
நீதி வழங்குவேன் அல்லது யாராவது நீதி வழங்கட்டும் என்று ஆசனத்தை விட்டு எழுந்து செல்வேன் என்றால் பொது வாழ்வுக்கு வரலாம்.
அல்லது வீட்டு வேலையை மட்டும் பார்ப்பது முழு சமூகத்துக்குமே சிறந்தது.