02-23-2006, 09:55 PM
அருவியில் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வசம்பு அவர்கள் கூறியமாதிரி சுயநலம் ஒன்றுக்காய் நாம் பல முகமூடிகளை அணிவது வழமை தான். அது நானாக தன்னும் இருக்கலாம். ஆனால் போர் முடிந்ததும் இங்கு இருப்பவர்கள் அங்கு போவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியம் அற்றது. வேண்டுமென்றால் நாம் அப்படி கற்பனை செய்து பார்க்கலாம். உதாரணத்துக்கு எமது நகரத்தில் இருந்து யாழ் சென்றவர்கள் மீண்டும் இப்படி ஒரு பயணத்தை இனி செய்யப்போவதில்லை என சலித்துக்கொள்கிறார்கள். இவர்களா அங்கு போய் நிரந்தரமாக இருக்கப்போகிறார்கள். நான் இப்படி ஒரு கேள்வியை எமது நகரத்தில் இருக்கும் பல தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்கள் என்னை நையாண்டி செய்வதுபோல் சிரிக்கிறார்கள். முடிவு என்னவென்றால் யாரும் அங்கு போய் வாழ தயாராக இல்லை. சும்மா உதட்டளவில் தான் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள். தாயகம் தேசியம் என்று எல்லோரும் கதைக்கலாம் அப்படி உணற்சிவசப்பட்டு கதைப்பவர்களை பார்த்து ஒரு சிறிய கேள்வியை கேட்கிறேன். உங்களுக்கு அப்படி ஒரு தாய் நாட்டு பாசம் இருந்திருந்தால் ஏன் வெளிநாடு வந்தீர்கள் தாயகத்தில் இருந்து போராடி இருக்கலாமே?

