02-23-2006, 09:38 PM
Quote:எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.
மன்னிக்கவேண்டும் அருவி. யாருடைய குருதியில் குளிர்காய்ந்து விட்டு....
எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை விட எனக்கு வயசு குறைவுதான். ஆரம்ப பிரச்சினைகள் எதுவும் எனக்கு தெரியாது. ஏன் சண்டை தொடங்கியது என்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் விடுதலையை விரும்புவன். தேசியத்தை மதிப்பவன். ஆனால் கேள்வி புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி தாயகம் போவர்களா இல்லையா என்றால் அதிகமானோர் போகமாட்டார்கள் என்பதே என்னுடைய கருத்து.
இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.
விளக்கம் தேவை. விடுதலைப்போராட்டம் நடக்கின்ற நாட்டில் பிறந்தது என் குற்றமா???
:roll: :roll:
.

