02-23-2006, 06:32 PM
<b>குறுக்குவழிகள் -107</b>
How to remove unused drivers? பாவனையற்ற டிரைவர்களை நீக்குவது எப்படி?
என்னிடம் ஒரு கம்பியூட்டர் உள்ளது ஆனால் Printer இல்லை. ஒன்று கிடந்தது: தற்போது அது பழுதடைந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒருமுறை scanner தேவைப்பட்டது, நண்பனிடம் வாங்கி பாவித்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டேன். எனது சகோதரி கடந்த வாரம் நோர்வேயிலிருந்து வந்தவர். தனது டிஜிட்டல் கமெராவில் படங்கள் நிறைந்து விட்டதால் எனது XP கம்பியூட்டருக்கு தனது படங்களை டவுண்லோட் பண்ணி சீடியில் பதிந்து கொண்டு போனார்.
இதுதான் நிலைமை எனில் நான் தற்போது கம்பியூட்டரை இயக்கும்போது மேற்கூறப்பட்ட மூன்று சாதனங்களின் டிறைவர்களும் சேர்ந்து இயங்க ஆரம்பிக்கின்றன என்பது எனது கவனத்திற்கு வராமல் போய்விட்டது. அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை. இந்த சாதனங்களை அகற்றும்போது அதற்குரிய டிறைவர்களை நான் uninstall செய்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டது எனது தவறுதான். இப்படி எத்தனை டிறைவர்கள் உள்ளனவோ? சரி இவைகளை எப்படி அகற்றுவதென பார்ப்போம்
1.Control Panel லில் உள்ள System Icon ஐ இரட்டை கிளிக் செய்யவும். ( அல்லது Windows+Break கீக்களை அழுத்தவும்)
2.வரும் ஜன்னலில் Advance Tab ஐ அழுத்தவும்.
3. வரும் புதிய பக்கத்தின் அடியில் காணப்படும் Environment Variable என்ற Tab அழுத்தவும்.
4.Environment Variable என்ற ஜன்னலில் கீழ் காணப்படும் System Variable என்ற பகுதியின் கீழ் அடியில் காணப்படும் New என்ற பட்டனை அழுத்தவும்.
5. New System Variable என்ற சிறிய பெட்டி வரும். அதில் Variable Name என்பதன் எதிரில் devmgr_show_nonpresent_devices என் ரைப் பண்ணவும். Variable Value என்பதன் எதிரில் 1 என ரைப் பண்ணவும். கிளிக் OK. மீண்டும் கிளிக் OK.
6. இப்போது System Properties டயலக் பெட்டியில் நிற்பீர்கள். Hardware Tab-->Device Manager-->View-->Show Hidden Devices இவைகளை கிளிக் பண்ணவும்.
7. Device Manager ஜன்னலில் மேலிருந்து கீழாக ஒவ்வொரு + அடையாளத்தையும் கிளிக்பண்ணி ஆராய்ந்து பார்க்கவும். மங்கலான icon காணப்படுகிறதாவென. மங்கலாக இருந்தால் டிறைவர் லோட் ஆகியுள்ளது ஆனால் device கழற்றப்பட்டுள்ளது என அர்த்தம். அதில் வலது கிளிக்பண்ணி Properties ஐ பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (Error code 45- Device not present என காணப்படலாம்)
8.அவைகளை வலது கிளிக்பண்ணி Uninstall செய்துவிடவும்.
அண்மையில் தான் இந்த விடயம் எனக்கு தெரியவந்தது. எனது கம்பியூட்டரில் இதை பரீட்சித்தபோது எட்டு டிறைவர்களை கண்டுபிடித்து அழித்தேன். சில இடங்களில் Duplicate ம் காணப்பட்டது. ஒரே டிறைவர் அருகருகே காணப்பட்டது. அதில் ஒன்று மங்கலாக இருந்த்து. தவறுதலாக ஏதாவது ஒன்று அழிபட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டாது. மீண்டும் install பண்ணிக்கொள்ளலாம்.
இவ்வேலையை முடித்துக்கொண்டு Cclener ஐ இலவசமாக டவுண்லோட் பண்ணி கம்பியூட்டரை சுத்தப்படுத்தினேன். அதன் பின் கம்பியூட்டரின் வேகம் அதிகரித்துள்ளதை காண்கிறேன்.
பிற்குறிப்பு:----இத்தொடர் பயனுள்ளது என்றும், தொடர்ந்து எழுதும்படி கேட்டும் Private Message அனுப்புகின்ற, இத்தொடரிலேயே வேண்டுகோள் விடுக்கின்ற எனது வாசகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடிந்தவரை முயற்சி செய்கின்றேன். தனிப்பட்ட முறையில் பதில் அனுப்பமுடியாமைக்கு வருந்துகின்றேன். மன்னிக்கவும்.