Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதுபான விளம்பரத்தில் துர்க்கை
#1
கிரீஸ் நாட்டில், துர்க்கை அம்மனின் கைகளில் மதுபானப் போத்தல்களுடன் காட்சியளிப்பது போன்று செய்யப்பட்டுள்ள விளம்பரத்திற்கு ஜரோப்பாவில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் உள்ள ஒரு அமெரிக்க மதுபான உற்பத்தி விற்பனை விடுதியில், துர்க்கை அம்மன் கைகளில் 'சதர்ன்கம்போர்ட் பிராண்ட் விஸ்கி' போத்தல்கள் வைத்திருப்பது போன்ற விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அந்த விடுதியின் உள்பகுதியிலும், வெளிப்புறச் சுவர்களிலும், அந்த விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு எதேன்சிலுள்ள இந்துக்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கண்டனக் கடிதங்களுக்கும் பதிலளிக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த சுவரொட்டிகளுக்கும் எதிராக ஜரோப்பா முழுவதும் உள்ள இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தகவல்- ஈழமுரசு
Reply


Messages In This Thread
மதுபான விளம்பரத்தில் துர்க்கை - by தாரணி - 02-23-2006, 05:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)