Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கள்ளக்காதலுக்கு இப்படி ஒரு தண்டனை
#1
<b>"கள்ளக்காதலியுடன் ஓட்டமா? 60 கிலோ இரும்பு பைப்பை துõக்கு!' * "கடவுள் சகோதரியாக' இனி பாவிக்கவும் கட்டளை</b>
ஜெய்ப்பூர்: மாற்றான் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டாலோ, கடத்திச் சென்று விட்டாலோ அவ்வளவு தான் பிடித்து வந்து, கள்ளக்காதலன் தலையில் 60 கிலோ இரும்பு பைப்பை வைத்து, வெயிலில் இரண்டு மணி நேரம் நிறுத்திவிடுவர். கள்ளக்காதலியை "கடவுள் சகோதரி'யாக இனி பாவிக்க வேண்டும். 11 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட பிரபலமான இரு இனத்தவரிடம் நுõறாண்டு காலமாக இந்த பாரம்பரிய தண்டனை பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிராம பெரியவர்களின் "மகா பஞ்சாயத்தில்' போலீஸ் இன்னும் கூட தலையிட முடியவில்லை.

ராஜஸ்தான் கராலி மாவட்டம் சுர்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜிலாலா. இவர் பக்கத்தில் உள்ள தல்லாபுரா கிராமத்தை சேர்ந்த ராம்லக்கன் என்பவரின் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டு, அவளுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டார். இதுபற்றி ராம்லக்கன், கரன்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தந்தார்.

இந்த விஷயம் பற்றி கிராம பஞ்சாயத்திலும், ராம்லக்கன் புகார் செய்திருந்தார். உள்ளூர் கிராம பஞ்சாயத்தை அடுத்து, 42 கிராமங்களை கொண்ட மகா பஞ்சாயத்து உள்ளது. அங்கும் இந்த புகார் போகும். அதனால், குற்றவாளியை கண்டுபிடிப்பது எளிது. ராம்லக்கன் புகார், கிராம பஞ்சாயத்து மூலம், மகா பஞ்சாயத்துக்கு போனதும், அடுத்த ஒரு வாரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

முந்திரி என்ற கிராமத்தில் கள்ள ஜோடிகள் குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது. மகா பஞ்சாயத்து ஆட்கள், அவர்களை பிடித்து வந்து ஒப்படைத்தனர். ராம்லக்கனை அழைத்து, அவர் மனைவியை அவரிடம் ஒப்படைத்து விட்டு, அந்த பெண்ணை கடத்திய கள்ளக்காதலனுக்கு தண்டனை அளித்தனர் பஞசாயத்தார்.

பஞ்சாயத்தில் தயாராக இருந்த 60 கிலோ இரும்பு பைப்பை, கள்ளக்காதலன் தலையில் வைக்கச் சொன்னார்கள். இரண்டு மணி நேரம் வெயிலில் அதை சுமந்து நிற்க வேண்டும். அதில் தவறினால், மீண்டும் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டும். மேலும், இப்படி நிற்கும் போது, <உடலில் துண்டு துணி கூட இருக்கக்கூடாது.

அத்துடன் இனி அந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அவளை "கடவுள் சகோதரி'யாக பாவிக்க வேண்டும். 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும்.

இவ்வளவும் சேர்ந்து தான் "கள்ளக்காதலுக்கு' தண்டனை. இதை மகா பஞ்சாயத்தினர், நுõறாண்டு காலமாக நடத்தி வருகின்றனர்.

இதை போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கராலி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரத்தன் குமார் பாண்டே கூறுகையில், "கிராம பஞ்சாயத்து என்பது பல ஆண்டாக இருந்து வருகிறது. பல இனத்தவர் இதை விட்டுவிட்டனர். ஆனால், மீனா மற்றும் கர்ஜார் இனத்தவர் மட்டும் விடவில்லை. காரணம், அவர்கள் தான் கிராமங்களில் அதிகம் உள்ளனர். எனினும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.

"போலீசில் புகார் செய்தாலும், கிராம பஞ்சாயத்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், கிராமங்களில் குற்றவாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாங்கள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை' என்றும் அவர் கூறினார்.

http://www.dinamalar.com/
Reply


Messages In This Thread
கள்ளக்காதலுக்கு இப்படி ஒரு தண்டனை - by Shankarlaal - 02-23-2006, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)