02-23-2006, 08:33 AM
ஒரு கருத்திப் பதிவினை தொடர்ந்து அனுமதித்து விட்டு சில கால இடைவெளிகளின் பின் அதனை நீக்குவதற்கான காரணம் என்ன? ஒரு பதிவு தவறானது என அல்லது கள நிபந்தனைகளிற்கு அமைவாக இல்லையெனின் அதனை உடனடியாக அகற்றிவிடலாமே. பின்னர் எதற்கு இவ்வாறான கால அவகாசம் வழங்கப்பட்டு மற்றைய உறுப்பினர்களை அதற்குப் பதில் எழுதத் தூண்டுகிறீர்கள். அவர்கள் அதற்கு பதில் எழுதும் போது அவை தூக்கப்படுகின்றன. சில இடங்களில் அவ்வாறு கருத்து எழுதத் தூண்டிய பதிவுகள் நீக்கப்படாமல் காணப்படுகின்றன. அது மீண்டும் அதற்குப் பதில் எழுதத் தூண்டுவதற்காகவா? தேசியத்திற்கு எதிராக யாரவது வேண்டுமென்றோ அல்லது சீண்டுவதற்காகவோ எழுதும் போது அது தொடர்பாக அமைதிகாக்கும் கள நிர்வாகம் அதற்கான பதில்கள் மற்றைய கள உறுப்பினர்களிடம் இருந்து வந்ததன் பின்னர் ஓடிவந்து அதற்கு பதில் கருத்து எழுதியவர்களின் பதிவுகளைத் துடைத்தெறிவதில் குறியாய் இருக்கின்றனர். இதனால் இன்றும் சில பதிவுகள் விடுபட்டு உள்ளன.இவ்வாறு பின்னர் எடுக்கும் முடிவுகளை உடனேயே எடுப்பதன் மூலம் பல வேண்டாத சிரமங்களைத் தவிர்க்கலாமே. இதற்கு நேரம் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம். நிர்வாகக்குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடுவதால் குறைந்தது ஒருவராவது ஒரு நாளில் களத்தைப் பார்வையிடும் சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.
நாம் 18000இனை அண்மித்த எம் இளையவர்களை மாவீரர்களாக இழந்த வலியுடனும் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட எம் உறவுகளையும் இழந்த வலியுடன் சுதந்திர தாயக விடுதலையை நேசித்து எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் அவர்கள் சிந்திய குருதியில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்களினால் அவர்களது இழப்புகளை உதாசீனப்படுத்தும் விதமான பதிவுகள் வரும்போது அதற்குத் தக்க பதில் எம்மிடமிருந்தும் யாழ் கருத்துக் களத்தில் வைக்கப்படும். அதற்காக எம்மை இக்களத்தில் இருந்து நீக்கிவைத்தாலும் நாம் மகிழ்வுடன் வெளியேறுவோம்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.