02-23-2006, 02:50 AM
Luckyluke Wrote:Niththila Wrote:என்ன லக்கி நான்ஒண்டும் தெரியாம எழுதுறன் எண்டீங்க எனக்க இந்திய அணி பற்றி தெரியாட்டி அது அவமானமில்லை உங்கட நாடு பங்களாதேஸ்அமைய உதவிய போது அது அங்கீகரிக்கப்பட்ட நாடாகவா இருந்தது இப்படித்தான் உங்கட நாட்டு வரலாறே தெரியாம இருக்கிறீங்களே
பங்களாதேஷை பொறுத்தவரை இந்தியாவிற்கு அங்கிருந்து வந்த அகதிகளால் பெரும் பொருட்செலவு ஏற்பட்டது.... மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்கள் எப்போது பார்த்தாலும் இந்திய எல்லை மீது பறந்து பங்களாதேசுக்கு சென்று கொண்டிருந்தது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.... மேலும் பாகிஸ்தான் கிழக்கில் இருந்தும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததை இந்தியா விரும்பவில்லை....
இலங்கையைப் பொறுத்த வரையில் விடுதலைப்புலிகளை விட இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது.... தேவை ஏதும் இல்லாமல் இங்கே மூக்கை நுழைக்க இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல.....
எந்த விடயத்தில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நட்புடன் நடக்கிறது எனச் சொல்ல முடியுமா? அந்த நட்புதான் சுனாமி வத்தபோது அமெரிக்க இராணுவத்தை இலங்கைக்குள் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்ததா?

