02-23-2006, 02:46 AM
Luckyluke Wrote:காவடி Wrote:நடந்த சம்பவங்களை வைத்து ஈழத்துடனான உறவை இந்தியா அணுகக் கூடாது. யுத்தம் புரிந்து, இன்றளவும் ஒருவித முறுகல் நிலையிலேயே இருக்கின்ற பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை செய்ய இந்தியாவால் முடியும் போது ஈழத்துடன் ஏன் முடியாது? அவ்வாறு முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன ?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... பாகிஸ்தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு... அதனுடன் ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட்டால் கூட செல்லும்....
இந்தியா எதுவாக இருந்தாலும் இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் ஈழம் விஷயத்தில் இறங்க முடியாது....
உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.... இன்னமும் ஈழம் உங்களைத்தவிர வேறு யாரிடத்திலும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.....
உங்களது ஓவர் கான்பிடன்ஸால் உங்களுக்கு யார் ஆதரவும் தேவையில்லை என்று முரட்டுத்தனமாக செயல்படுகிறீர்கள்.......
நாம் எழுதுவதால் வெறுப்பேற்படுகிறது எனச் சொன்ன லக்கி இப்ப என்ன எழுதியிருக்கிறீரகள். நீங்கள் என்ன சிறுபிள்ளைத்தனமாய் கதைத்தாலும் அது சரி, எங்களுக்கு வெறுப்பு வரக்கூடாது அப்படித்தானே.

