02-04-2004, 05:53 AM
தமிழ் தனித்தமிழா கலப்புத்தமிழா என்று ஆராய முன்பு அதை கலந்தது யார் என்று யோசித்துப்பாருங்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் பெருமை வேண்டி தமிழில் சமஸ்கிருதம் கலந்து பயன்படுத்தினார்கள் ஏன் அவற்றுக்கு நிகரான தமிழ் சொல் இல்லாமையாலா? இல்லை எல்லாம் ஒரு தற்பெருமைக்கு அதனை மணிப்பிரவாள நடை என்று சொல்வார்கள் அதாவது ச விற்கு பதிலாக ஸ வை உபயோகிப்பது.
எமது காலத்தில் நாங்கள் தற்பெருமை பேசுவதற்காக ஆங்கிலத்தை கலந்தோம் எங்கள் சந்ததி இருக்கும் இடத்திற்கு பொருத்தமாக French, Dutch இன்னும் பிறமொழிகளை கலக்கின்றது
மொத்தத்தில் பிழை எங்களது அந்தக்காலத்தில் இருந்த மொழிகளில் சிறிது சிறிது எடுத்து ஆங்கிலம் என்று ஒரு கலவை மொழியை உருவாக்கினான் வெள்ளையன் நாங்கள் தொன்மை நிறைந்த எங்கள் தமிழ் மொழியில் அதை கலப்பது சரியா என்று விவாதித்து கொண்டிருக்கின்றோம்
ஒரு விவாதத்திற்கு அப்படி கலந்த ஆங்கில மொழி தான் உலகில் முன்னனியில் இருக்கிறதே என்று கேட்பவருக்கு ஒரு கேள்வி உங்களால் ஆங்கிலத்தை பயன்படுத்தி எவ்வித தங்கு தடையின்றி உரையாட முடியுமா அப்படியாயின் "உங்களுக்கு இன்று எத்தனையாவது பிறந்த நாள்" இதனை நேரடி அர்த்தம் தொனிக்கும் வகை ஆங்கிலத்தில் மொழி பெயருங்கள் பார்க்கலாம்
எனது கருத்து என்னவென்றால் எந்தவொரு மொழியையும் தேவை கருதி தமிழுடன் சேர்த்து பயன் படுத்துவது பிழை இல்லை ஆனால் அதனை தமிழுடன் கலந்து தமிழின் அழகையும் கெடுத்து அந்த மொழியையும் கெடுப்பது தான் பிழை