Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் பறவை காச்சல்?
#13
இந்தியாவில் பறவைகாய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சோதனைக்குட்படுத்தப்பட்ட 95 பேரில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.

நன்றி NTT

இந்தோனேஷியாவில் மேலும் ஒருவர் பறவைக் காய்ச்சலுக்கு பலி



பறவைக் காய்ச்சலுக்கு காரணமான ஹெச்.5.என்.1 வைரஸினால் மற்றுமொருவர் இறந்ததாக இந்தோனேஷிய அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

தலைநகர் ஜகார்த்தாவைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவரே இவ்வாறு இறந்ததாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் நடத்தப்படும் சோதனைகளில் இது உறுதிசெய்யப்பட்டால், அந்த நாட்டில் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த 20ஆவது நபர் இவராவார்.

அண்டை நாடான மலேசியாவில் இவ்வருடத்தில் முதல் தடவையாக அதிகாரிகளால் செவ்வாயன்று பறவைகளில் இந்த வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இந்த காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அவதியுறும் 7 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளதா என்று சோதனை நடத்தப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை கோழிகளில் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் மஹராஷ்ர மாநிலத்தில் குறைந்தது 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தற்போது நைஜீரியாவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மேற்கு ஆப்பிரிக்கா பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் எச்சரித்துள்ளது.

நைஜீரிய அரசின் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், கோழிகளின் விற்பனை மற்றும் அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது தொடர்ந்தால், அதன் மூலம் இந்த வைரஸ் பரவும் அபாயம் உண்டு என்றும், உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் தலைமை கால்நடை மருத்துவர் ஜோசப் டொமன்ஞ் கூறுகிறார்.

நன்றி பிபிசி தமிழ்
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-09-2006, 06:54 PM
[No subject] - by Mathan - 02-10-2006, 09:32 PM
[No subject] - by Mathan - 02-11-2006, 11:57 PM
[No subject] - by iniyaval - 02-12-2006, 12:59 AM
[No subject] - by Mathan - 02-13-2006, 09:09 AM
[No subject] - by kuruvikal - 02-18-2006, 11:08 AM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:18 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:25 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:55 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:57 PM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:13 PM
[No subject] - by yarlpaadi - 02-22-2006, 10:41 PM
[No subject] - by Danklas - 03-02-2006, 10:44 AM
[No subject] - by தூயவன் - 03-02-2006, 10:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)