02-22-2006, 09:16 PM
பல வேளைகளில் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். எமது தாயகப் போராட்டம் ஒரு நீண்ட கால போராட்டமாக உருவெடுத்ததால் பலரின் அன்றைய மனநிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதுபோல் பலருக்கு அவர்களின் குடும்பம் முழுவதும் புலம் பெயர்ந்து விட்டனர். பலர் 3 வது தலைமுறையையும் புலம் பெயர்ந்து கண்டு விட்டனர். இந்நிலையில் இவர்கள் எல்லாம் நாடு திரும்புவார்கள் என்பது கேள்விக் குறியே. இதற்காக நமக்குள் நாமே மோதிக் கொண்டு கருத்தாடுவதில் எவ்வித பயனுமில்லை. முன்பு சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது பிரைச்சினைகள் தீரலாம் என நம்பிக்கை உருவான பொழுது ஐரோப்பாவிலிருந்து தமிழர்கள் திருப்பி அனுப்பப் படலாம் என்ற நிலையும் உருவானது. இங்கு சில வானொலிகளில் அது பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றன. அவற்றில் பதட்டத்துடன் பலர் கேட்ட கேள்வி அகதியாக இல்லாமல் இருப்பவர்கள் வாழும் நாடுகளின் வதிவிட உரிமை பெற்றவர்களையும் திருப்பி அனுப்பி விடுவார்களா என்று தான். எனவே எம்மில் பலரின் வாய்மொழிக்கும் செயற்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள். <b>உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே.</b>
<i><b> </b>
</i>
</i>

