Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிம்பு புறநானூற்று வீரன் எப்பிடி இருக்கு?
#1
<b>சிம்பு புறநானூற்று வீரன் - டி.ஆர்</b>
சிம்புவிற்கு இன்று 21வயது பிறக்கிறது. இந்நாளில் தனது மகனை வாழ்த்தி வரவேற்று பாராட்டி மகிழ்கிறார் டி.ஆர்.

பிப்.3ம் தேதியான இன்று சிம்புவின் 21வது பிறந்த நாள். இது குறித்து டி.ஆரிடம் கேட்டபொழுது,


சின்ன குழந்தையிலேயே வருமான வரி செலுத்தியவன் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தை தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன் என்று 6 படங்களில் தற்போது நடித்திருக்கிறான். 7 வது படத்திற்காக பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டு அணுகியிருக்கிறார்கள்.


காதல் அழிவதில்லை படம் வெளியானபோதுதான் விஜயகாந்தின் ரமணா, விஜய்யின் பகவதி, அஜீத்தின் வில்லன் ஆகிய படங்கள் வந்தன. பெரிய நடிகர்களோடு போட்டி போட்டு புறநானூறு வீரனாக ஜெயித்திருக்கிறான். பொங்கல் தினத்தில் திரைக்கு வந்த கோவில் படமும் தனியாக வந்துவிடவில்லை. விருமாண்டி, எங்கள் அண்ணா, ஜெய் போன்று பிரபலங்கள் நடித்த படங்கள் திரைக்கு வருவதை எதிர்நோக்கி வெளியான படம் தான் அது டி.ஆர்.மட்டும் எதிர் நீச்சல் போடுபவன் அல்ல. சிம்புவும் எதிர்நீச்சல் போட்டுத்தான் இன்றைக்க தம்முடன் நிற்கிறான்.


சிம்புவுக்கு படம் குவிகிறது என்பதற்காக நானும், உஷாவும்(சிம்புவின் தாயார்) வந்த படங்களை எல்லாம் ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்ளவில்லை.(யாரை குறிப்பிடுகிறார்?) அவனுக்கு ஒரு வழிகாட்டியாகத்தான் இருக்கிறோம். அவன் நடிக்கும் எந்த படத்தின் படப்பிடிப்புக்கும் போய் நான் தலையிட்டதில்லை. எந்த இயக்குனரின் எண்ணத்திலும் நான் தலையிடுவதில்லை.


அவன் தனது படங்களில் இரவல் குரலுக்காக காத்திருப்பதில்லை. தனது சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசுகிறான். சண்டை காட்சியிலும் சரி, நடன காட்சியிலும் சரி டூப் போடச்சொல்லி கேட்பவன் அல்ல சுறுசுறுப்பாக அவனே நடிப்பவன். இன்றைக்கு மன்மதன் படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்திருக்கிறான். என்னுடைய ரத்தம் என்பதை நிரூபித்துவிட்டான்.


எதிர்காலத்தில் தமிழகத்தில் வரலாற்று நடிகனாக தனி அத்தியாயம் படைப்பான் இறைவன் ஆசியுடன் வென்று காட்டுவான்.


என்று இவ்வாறு சிம்புவை வாழ்த்தினார் டி.ஆர்.


சுட்ட இடம்: CineSouth
Reply


Messages In This Thread
சிம்பு புறநானூற்று வீ - by Mathan - 02-04-2004, 03:31 AM
[No subject] - by shanmuhi - 02-04-2004, 08:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)