02-22-2006, 10:42 AM
Luckyluke Wrote:காவடி Wrote:ஆனால்.. அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தங்கள் விமோசனத்துக்கு புலிகளைத்தானே நம்பியாகவேண்டும்.
இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....
சுபாஷ் சந்திரபோஸும் கூட புலிகளின் வழியை தான் இந்திய சுதந்திர போருக்கு எடுத்துக் கொண்டார்.... ஆனால் சுதந்திர போருக்கு போராடிய மற்ற இயக்கங்களை அவர் அழிக்க முயற்சிக்கவில்லை......
தவறாக எண்ண வேண்டாம்..... மற்றவர்கள் இந்த கருத்துக்காக என்னை வசைபாடவும் முயற்சிக்க வேண்டாம்.... முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....
இலங்கையில் ஒரு காலத்தில் பல இயக்கங்கள் தமிழீழ விடுதலை என்ற பெயரின் கீழ் இயங்கின. அதில் பல இளைஞர்களும் சேர்க்கப்பட்டனர். அதைவிட அதிக இளைஞர்கள் பல இயக்கங்களில் வலுக்கட்டாயமாகவும் சேர்க்கப்பட்டனர். அதனால் அவ்வியக்கங்கள் தம் அளவிற்கு மீறிய அளவு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். இதனால் அவ்வியக்கங்களை நிர்வகிப்பதற்கு அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அதனால் அவ்வியக்கங்களில் ஓழுக்கமின்மை பரந்து காணப்பட்டது. அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆனால் புலிகள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தம் உறுப்பினர்களை வைத்திருந்தார்கள். அதாவது தம்மால் முடிந்த அளவு உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்தார்கள். அதனால் அவர்களால் ஒரு கட்டுப்பாட்டினுள் தம் உறுப்பினர்களை வைத்திருக்க முடிந்தது. தம் சக்தியை மீறி அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தில் சேர்வதற்கென்றே பல இளைஞர்கள் அவர்கள் பின்னால் மாதக்கணக்கில் திரிந்த வரலாறும் உண்டு.
அவ்வாறு அவல நிலையில் இருந்த மற்றைய இயக்க உறுப்பினர்கள் ஒருகட்டத்தில் தம் மக்களையே அச்சுறுத்தும் நிலைக்கு இறங்கினார்கள். தமிழீழம் என்ற கொள்கைக்காகப் புறப்பட்டு அப்பிரதேச மக்களிற்கே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததனாால் அம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை நிலவியது. அன்றைய காலப்பகுதியில் ஓர் கட்டுப்பாடான இயக்கமாக மக்கள் மத்தியில் நற்பெயருடன் இருந்த ஒரே ஒரு இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் அத்தேவையினை நிறைவேற்ற மற்றைய இயக்கங்களைத் தமிழீழப் பிரதேசங்களில் தடைசெய்தார்கள். புலிகள் அவர்களைத் தடைசெய்ய முன்பே அவ்வியக்கங்களில் இருந்த பலர் தம் தலைவர்களில் நம்பிக்கை இன்றி அவ்வமைப்புக்களை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டார்கள்.
அதன் பின் அவ்வியக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து தாம் முன்பு கொண்டிருந்த தமிழீழம் என்னும் கொள்கையில் இருந்து விலகி அதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார்கள். அதன் பின்னர் அவர்கள் இரணுவத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு இராணுவத்தின் ஒரு பிரிவாகச் செயற்படுகிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

