02-22-2006, 10:36 AM
லக்கி, ராஜா..உங்கள் பதில்களைப் பார்த்தேன். நாங்களும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில்,ஒருமித்த கருத்தில் நிற்க, எதற்காக இத்தனை சண்டைகளும் சச்சரவுகளும்.. ? எனக்கு புரியவில்லை!
விடுதலைப்புலிகளின் தலைவர் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு கேள்விக்கு கீழிக்கண்டவாறு கருத்துப்படதெரிவித்திருந்தார்." எந்த ஒரு உலக நாடும் தனக்கு இன்னொரு நாட்டிடமிருந்து கிடைத்த கசப்பான அனுபவங்களை தொடர்ந்தும் பேணிக்கொண்டிருப்பதில்லை. காலத்தின் ஓட்டத்தில் அவை மறக்கப்பட கூடியவை"
ஈழத்தில் சில தடைகள் இருக்கின்றன என்பவற்றை ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பாக விடுதலைப்புலிகளின் சில தவறான அணுகுமுறைகளை பகிரங்கமாக விமர்சிக்க முடியாது என்பதனை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் லக்கி மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் போராடும் அமைப்பு, அந்த அமைப்பை அப்படியே அழித்தொழிக்க பல பலமான சக்திகளும், புலிகளை தனிப்பட்ட காரணங்களிற்காக விமர்சிக்க காத்திருப்போருக்கும் மத்தியில் சில விடயங்களை பகிரங்கப்படுத்த முடிவதில்லை..
இந்தக் கவிதை புரிகிறதா என பாருங்கள்.
நான் அரச பயங்கர வாதத்தின்
அட்டுழியம் பற்றிப் பேசினேன்.
அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள்
நான் அரச இராணுவத்தின்
அடக்குமுறை பற்றிப் பேசினேன்.
அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள்.
நான் அரசக் காடையர்களின்
காடைத்தனம் பற்றிப் பேசினேன்.
அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றி பேசினார்கள்.
நான் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினேன்..
அவர்கள் எனது வார்த்தைகளை கடன்வாங்கி கொண்டார்கள்.
அந்த அவர்கள் யாரென்பது உங்களுக்கு தெரியும். ஆனால்.. என்னால் 100 வழுத உறுதியுடன் சொல்ல முடியும்.. உங்கள் விமர்சனங்களை குழப்பங்களை கேள்விகளை சரியான முறையில் புலிகளுக்கு அவர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். உண்மையில் அவர்கள் மீதான விமர்சனங்களை அவர்களிடம் மட்டுமே சொல்லுவது போராட்டம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்ற அனைவரும் செய்யக் கூடியது.
புலிகள் மீதான விமர்சனங்களை, விசமத்தனமாக தமது மாற்று அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தி வெளியிடுபவர்கள் ஒருவகையினர்.
புலிகளின் மீதான விமர்சனங்களை புலிகளின் மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பவர்கள் அதனை புலிகளிடமே சொல்வது இன்னொரு வகை.
எனக்கு தெரியவே.. புலிகளின் சில நடவடிக்கைகளை புலிகளிடம் தைரியமாக எடுத்துச் சொல்கின்றார்கள் சிலர். புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல கல்விமான்கள், பத்திரிகையாளர்கள் இவ்வாறு பலர் தங்கள் விமர்சனங்களை புலிகளிடம் சொல்கிறார்கள். இது தவிர புலிகள் இயக்கித்திலேயே உள்ள சில முக்கிய பிரமுகர்கள் மிகச்சரியாக தம்மையே விமர்சிக்கிறார்கள்.
உண்மையில் புலிகள் இயக்கம் தனது பொராட்டப்பாதையில் மிக வெற்றிகரமாக செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் அவ்வமைப்பு விடும் தவறுகளை சுட்டிக்காட்ட விரும்புவர்கள் அந்த அமைப்பிடமே சுட்டடிக்காட்டலாம் தானே..
அதுவல்லாமல்.. அதனை தமக்கான அரசியலுக்கு பயன்படுத்தி லாபம் தேடுகின்றவர்களை என்ன செய்வது

, ...