02-22-2006, 09:33 AM
Luckyluke Wrote:காவடி Wrote:பொதுவாகவே எனக்கு.. ஒரு விவாதத்தின் போது எங்கள் மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டால்.. நாங்கள் மட்டுமா.. நீங்களும் அப்படித்தானே என கேள்வி கேட்டு விவாதம் தொடர விருப்பம் இல்லை.. எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வு அப்போதைய கணத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இதையே தான் நானும் சொல்கிறேன்... 20 ஆண்டுகளுக்கு முந்தைய அமைதிப்படை கதையையே இன்னும் பலர் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்களே... அதற்கு பின் இந்தியாவில் நடந்த மாற்றங்கள் எல்லாம் என்னவென்று யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா?
ஈழத்தில் யாரையாவது கொசு கடித்தால் கூட 'ரா'வின் சதி என்று புலம்புபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது....
'ரா'வுக்கு உள்நாட்டிலேயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்போது.... ஈழம் ஒரு முக்கியப் பிரச்சினையாக அந்த அமைப்புக்கு இருக்க முடியாது.....
மாப்பிள்ளை லக்கிலுக் உனது நிலைப்படு தான் எனது நிலைப்படும் போனது போகட்டும். ஆனால் எமக்கு மிக அருகில் இருக்கும்( என்ன ஒரு 35 கடல்மையில்) ஈழத்தமிழனின் உனர்வுகளை எமக்கு 1000 KM தள்ளி இருக்கிற நம்ம அரசு புரிந்து கொள்ளா விட்டாலும் நாம் புரிந்து கொண்டு செய்ற்பட்ட இந்த உலகத்தில முதல் முதலாக 10 கோடி தமிழனுக்கு ஒரு நாடு உருவாகி விடும் அல்லாவ?
மாமா சொன்னா கேட்பியா?

