02-22-2006, 08:01 AM
Quote:இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....சரி உங்கள் வாதத்தையே ஏற்றுக்கொள்வோம். ஆனால் தற்போதைய யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? இப்போது ஈழ தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தருகின்ற ஒரே அமைப்பாக புலிகளள் மட்டும் தானே இருக்கிறார்கள்.. பொதுவாகவே எனக்கு.. ஒரு விவாதத்தின் போது எங்கள் மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டால்.. நாங்கள் மட்டுமா.. நீங்களும் அப்படித்தானே என கேள்வி கேட்டு விவாதம் தொடர விருப்பம் இல்லை.. எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வு அப்போதைய கணத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒருவேளை இனிமேல் புலிகள் என்ன செய்யக்கூடாது என இந்தியா நினைக்கிறது என ஆராய்வது பலனுள்ளது.
ஆயினும், போராடப் புறப்பட்ட பல இயக்கங்கள் அந்த நோக்கத்தை மறந்து சோரம் போனதனை நீங்கள் அறிவீர்கள் தானே
, ...

