02-21-2006, 08:24 PM
சாந்தி ஊருக்கு போனதன் பின்னர் சில கடிதங்கள் சிவாவற்கு வந்தன சிவாவும் வழைமைபோல பதில் அனுப்பியிருந்தான்; அந்த காலகட்டத்தில்தான் மாபெரும் அவலமான யாழ்ப்பாண் இடப்பெயர்வு நடந்தது...
அந்த இடப்பெயர்வின்போது சிவாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து வன்னிவந்து பின்னர் கொழும்பிற்கு வந்து விட்டனர். அந்த இடப்யெர்வின் பின்னர் சாந்தியிடமிருந்து சிவாவிற்கு எந்த விதமான தொடர்புகளும் கிடைக்கவில்லை
சிவாவும் ஒவ்வொரு நாளும் கடிதப்பெட்டியை திறக்கும்போதெல்லாம் சாந்தியின் கடிதம் வந்திருக்காதா என்கிற ஒரு எதிர் பார்ப்புடன் திறந்து ஏமாந்து கொண்டிருந்ததே வாடிக்கையாகி விட்டது.
சில நேரங்களில் சிவாவின் கற்பனைகளும் வேறு விதமாக ஓடியது சாந்திக்கு ஏதாவது நடந்திருக்குமா??என்று ஒருவித தவிப்பு அவனுக்குள் அதனால் ஒவ்வொரு நாளும் தமிழ் செய்திகள் மற்றும் பத்திரிகை என்பனவற்றையெல்லாம் தவறாமல் பார்த்து வந்தான்அனாலும் சிவாவிற்கு ஒரு நம்பிக்கை சாந்தி எங்கிருந்தாவது தான்னிடம் தொடர்பு கொள்வாள் என்கிற நம்பிக்கை மட்டும் அவனிடமிருந்தது.
அவனது நம்பிக்கை வீண்போகவில்லை சுமார்பத்து மாதங்கள்கழித்து அன்று சாந்தியிடமிருந்து ஒரு கடிதம் அவனுக்கு வந்திருந்தது. நடுங்கும்கைகளுடன் அக்கடிதத்தை பிரித்தான்
<span style='font-size:25pt;line-height:100%'>அன்புள்ள சிவாவிற்கு
நீண்ட நாட்களின் பின்னர் நான் எழுதும் நீண்டகடிதமிது. எனக்குத்தெரியும் நீங்கள் எனது கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்திருப்பீர்கள் ஆனால் என்ன செய்வது எங்கள் ஊர்பிரச்சனைகள் அறிந்திருப்பீர்கள் தானே. அந்த இடப்பெயர்வினை பற்றி நான் இங்கு எழுத்திலோ ஏன் வார்த்தைகளால் கூட விபரிக்க முடியாது சிவா. அப்படியொரு அவலம்.பிணஊர்வலங்கள் பார்த்திருப்பீர்கள் அன்று நாங்களே பிணங்களாய் ஊர்வலமாய் போனோம்.
எனக்கு இதுவரை நடந்த பிரச்சனைகளின்போதெல்லாம் நான் கடவுள் இருக்கிறார் பார்த்து கொள்வார் என்று அமைதியாய் இருந்திருக்கிறேன் ஆனால் அன்று அந்த அவலத்தை பாத்து கொண்டிருந்தவரின் பெயர் கடவுள் என்றால் அப்படியொரு கடவுள் தேவையில்லை. எல்லாருமே கையில் அகப்பட்டதை எடுத்து கொண்டு மாற்று துணிகூட எடுத்து கொள்ளாமல் நாங்களும் மற்றவர்களை போலவே அவசர அவசரமாய் எல்லாவற்றையும் விட்டு விட்டு வன்னி போவதற்காய் கிளாலி கரைக்கு வந்தோம்.
ஆனால் நான் அந்த அவசரத்திரலும் நான் நீங்கள் கடைசியாய் விமான நிலையத்தில் தந்த கடிதத்தையும் மீண்டும் உங்களிடம் வரும் நோக்குடன் எனது கடவு சீட்டையும் மறக்காமல் பத்திரமாய் எடுத்து கொண்டே வந் தேன். அங்கே கிளாளி கரையில்தான் இன்னொரு பயங்கரம் நடந்தேறியது அதை நினைத்தால் இன்னமும் எனது இதயம் நடுங்குகிறது. ஏதுமின்றி அகதிகளாய் அபலைகளாய் ஓடிய மக்களைநேக்கி இரக்கமேயில்லாத இராணுவத்தினர் செல்லடித்தும் ஆகாயத்திலிருந்து கெலிகள் மூலமும் சுடதொடங்கி விட்டனர்.
எங்கும் ஒரே மரண ஓலம் மனித அவலம் நீலமாய் இருந்த கடல் எம்மக்களின் இரத்தத்தால் சிவப்புகடலாகி விட்டது.நாங்கள் எப்படியோ உயிர்தப்பிவிட்டோம். அன்று மாலை வரை ஒரு பற்றை பகுதியில் மறைந்திருந்து விட்டு மாலையானதும் அங்கு வந்த போராளிகளின் உதவியுடன் ஒரு வள்ளத்தில் ஏறி வன்னிக்கு வந்து விட்டோம்.அன்று அந்த நிகழ்ச்சி என்னை சரியாகவே பாதித்து விட்டது அன்று எம்மக்கள் பட்ட துன்பத்தை பார்த்போது அதற்கு முன்னால் நான் பட்ட துன்பங்கள் எல்லாம் வெறும் தூசிக்கு சமானம்.
அதனால் நானும் உங்களிடம் வருவதற்காய் பத்திரமாய் எடுத்து வந்த எனது கடவுசீட்டை அன்று அந்த கிளாலி கடலிலேயே கிழித்து கரைத்து விட்டேன்.ஆம் எனது இனம் பட்ட இப்படியொரு துன்பத்தை பார்த்தபின்னும் நான் வெளிநாடு வந்து உங்களுடன் உல்லாசமாய் எனது காலத்தை கழிக்க எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
வன்னி வந்த பின்னர் ஏற்கனவே நேய்வாய் பட்டிருந்த எனது தாயாரும் இறந்து விட்டார். தங்கை கனடா போன விடயம் உங்களிற்கு எற்கனவே தெரியும்தானே.அம்மாவின் மரணத்தின் பின்னர் அப்பாவும் ஏதோ இறுதிகாலத்தை கடத்தினால் போதும் என்கிற நிலைமையில் வழ்ந்து கொண்டிருக்கிறார்.இந்த பிரச்சனைகளாலேயே உங்களிற்கும் கடிதம் போட முடியவில்லை. நீங்கள் எனக்கு எனது விருப்பத்தை தெரிவிக்க எனக்கு தந்த ஒரு வருட கால கெடு முடைவடைகிற காலம் நெருங்கி விட்டதால் வன்னியின் ஒரு காட்டுபகுதியில் போராளிகளின் பயிற்சி பாசறையில் இருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.
ஆம் சிவா இப்போ நான் எனது மக்களிற்காய் போராட பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் ஒரு போராளி. எனது பயிற்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து நான் இப்பபோது தொடர்ச்சியாய் நடந்து கொண்டிருக்கும் ஜெயசுக்குறு களத்திற்கு போய்விடுவேன் பின்னர் உங்களுடன் தொர்பு கொள்ளமுடியாமல்போய்விடலாம். இதுவே எனது இறுதிக்கடிதமாகவும்கூட இருக்கலாம். எனவே உங்கள் நல்ல குணத்திற்கு என்னைவிட ஒரு நல்ல பெண் கிடைப்பாள் எனவே நீங்கள் திருமணம் செய்து நல்லபடியாக சந்தோசமாக வாழுங்கள் அதுவே எனது விருப்பம்.
எனது இந்த முடிவால் நீங்கள் என்னில் கோபிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் எனது நிலைமை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் திருமணமாகி உங்கள் மனைவி பிள்ளைகளுடன் இங்கு வரும்நாளை எதிர்பார்த்து உயிருடனோ அல்லது இந்த மண்ணிறகாய் உயர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லளைகளினுடே ஒரு கல்லறையாகவோ காத்திருப்பேன். இதுவரை காலமும் தெரியாத பாதையில் பயணித்து கொண்டிருந்த நான் இப்போது தான் தெளிவான பாதையில் பயணிக்கிறேன்
அன்புடன் உங்கள் நினைவுகளை உயிருள்ளவரை சுமந்து நிக்கும் சாந்தி</span>

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/