02-21-2006, 05:57 PM
பறவைக்காய்ச்சல் தொடர்பில் ஆசிய அரசுகள் நடவடிக்கை
ஆசிய அரசாங்கங்கள் பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனால் தற்போது மலேசியாவில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; மலேசியா பறவைக் காய்ச்சலை தடுத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்திருந்ததது.
2004 ம் ஆண்டு தாய்லாந்து நாட்டை ஒட்டி அதிக மக்கள் தொகை இல்லாத ஒரு இடத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பாதிப்பைத் தவிர வேறு ஏதும் பெரும் விளைவு இல்லை என அந்த நாடு தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகில் உள்ள ஒரு பண்ணையில் 40 கோழிகளுக்கு அபாயகரமான எச்.ஐந்து.என்.ஒன்று வகை வைரஸ் தாக்கியுள்ளதாக உறுதி படுத்தியுள்ளது.
அண்டை நாடான சிங்கபூர் மலேசியாவின் தாக்கப்பட்ட பகுதியிலிருந்து அனைத்து பண்ணை பறவை இறக்குமதிகளை தடை செய்யதுள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்ட பிறகு மேற்கு மஹாராஷ்டிராவில் பணியாளர்கள் 50 லட்சத்திற்க்கும் அதிகமான கோழிகளை கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அங்கு பறவை காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் அதிகாரிகள் இதுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப் பட்டதாக உறுதியான தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வைரஸில் மாற்றம் ஏற்பட்டு ,ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அது லட்சக்கணக்கானவர்களை தாக்கும் கொள்ளை நோயாக மாறக்கூடும் என அமரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நோயை கட்டுக்குள் வைப்பது என்கின்ற கொள்கையை கடைப்பிடிப்பது, இந்த நோயின் பின்விளைவுகளை சமாளிக்க தேவையான கால அவகாசத்தை மட்டுமே பெறும் என்று அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரியின் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் 170 பேர்களுக்கு இந்த பறவை காய்ச்சல் தொற்றியுள்ளது எனவும், 90 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது வரை இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியுள்ளதாக உறுதியான செய்திகள் இல்லை.
இதற்கிடையே இந்தியாவில் பழங்குடிகள் வாழும் மஹாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் அதிகாரிகள் குறைந்தது 7 நோயாளிகளை, குறிப்பாக குழந்தைகளை, அவர்களுக்கு இருமல், காய்ச்சல் ஏற்பட்ட பிறகு முழுவதுமாக தனிமைப்படுத்தியிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
BBC tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>