02-21-2006, 03:12 PM
Quote:வைகோ அதிமுகவிற்கு பாய்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சம்யத்தில் அவர் தொடர்ந்தும் திமுகவிலேயெ இருக்க வேண்டுமென கடல் கடந்து ஒரு அறிவுறுத்தல் வந்தது என உங்கள் ஊர்ப் பத்திரிகைகளில் பார்த்தேன். அது பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
அது தினமலர் என்னும் பத்திரிகையின் கட்டுக்கதை....
வைகோவின் ரிமோட் ஈழத்திலிருந்து இயக்கப்படுகிறது என்பதை நான் நம்பவில்லை......
கலைஞர் டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ஏனைய இயக்கங்களை ஆதரித்தார்.... அவருக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டிய நிலையில் இருந்த எம்.ஜி.ஆர். மீதமிருந்த இயக்கமான புலிகளை ஆதரித்தார். இது தான் உண்மை....
இன்றைய திருச்சி பேட்டியில் கூட கலைஞர் ஈழத்தமிழர் மீதான தனது அக்கறையை தெளிவுபடுத்தியிருக்கிறார்....
புலிகளை ஆதரித்தால் தான் ஈழத்தமிழரை ஆதரிப்பது என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் அது நகைப்புக்குரியது....
தமிழ்மக்களின் அனுதாபம் அப்பாவி ஈழத்தமிழர்களின் மீது மட்டுமே.... புலிகள் மீது கிடையாது.....
,
......
......

