02-21-2006, 03:05 PM
Quote:அவர் ஆட்சி 91ல் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்ற காரணத்துக்காக கலைக்கப்பட்டது.... அப்படியிருந்தும் புலிகள் கலைஞரை ஒரு பொருட்டாக என்றுமே மதித்தது கிடையாது.....இது பற்றி எழுதிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள், எம்ஜிஆர் ஒருமுறை புலிகளை சந்திக்க அழைப்பு விடுத்ததாகவும், அதையறிந்த கலைஞர் குறித்த அதே நாளில் அனைத்தப் போராளிக்குழுக்களுக்கும் சந்திக்க அழைப்பு விடுத்து அதனை அரசியலாக்க முனைந்தார் என்றும், தம்மை மட்டுமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்று அழைத்த எம் ஜி ஆரின் அழைப்பினை தாம் ஏற்றுக் கொண்டதாகவும் எழுதுகிறார். அந்தச் சந்திப்பே எம் ஜி ஆருக்்கும் புலிகுள்கும் இடையில் மிகுந்த நெரக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பு. அந்தச் சந்திப்பிலேயே புலிகளுக்கு 4 கோடி ரூபாக்கள் வழங்குவதாக எம் ஜி ஆர் உறுதியளித்தார். இவ்வாறு எம் ஜி ஆருடன் நெருங்கிய பின்னர் புலிகள் கலைஞரை புறக்கணித்தமை ஒருவித அரசியல் தழுவிய நிலைப்பாடுதான்.
ஆனாலும் 87 களில் புலிகளின் ஒரு குழு( யோகரட்ணம் யோகி, அன்ரன் பாலா ) கலைஞரை சந்தித்திருந்தது. அதன் பின்னர் யுத்தம் ஆரம்பமாகிவிட ... அவை நடந்த கதைகள்..
இன்னுமெபன்று எந்த அளவிற்கு உண்யென தெரியாது. ஒருவேளை அகண்ட ஈழம் கதைபோலவே பொய்யானதாய் இருக்கலாம். வைகோ அதிமுகவிற்கு பாய்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சம்யத்தில் அவர் தொடர்ந்தும் திமுகவிலேயெ இருக்க வேண்டுமென கடல் கடந்து ஒரு அறிவுறுத்தல் வந்தது என உங்கள் ஊர்ப் பத்திரிகைகளில் பார்த்தேன். அது பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
, ...

