02-21-2006, 02:42 PM
காவடி Wrote:நன்றி லக்கி! இன்னமும் இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் இதனை ஏற்கவில்லை என்றாலும் ஓர் அரசினைத் தீர்மானிப்பது மக்களெ என்பதனால் மக்களின் விரும்பம், ஆசை அரசிலும் செல்வாக்கு செலுத்தும் என நம்புவோம்.
உண்மையில் இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் வழங்கப்போகிறதாம் என செய்திகள் வரும் போதெல்லாம் எமக்கு கோபத்திற்கு முன்பதாக வருவது ஏக்கம் தான். இந்தியா எதற்காக இப்படி செய்கிறது என்ற ஆதங்கம் தான்,
இந்திய அரசு எக்காரணத்தை கொண்டும் அழிவு ஆயுதங்கள், புதிய தொழில் நுட்பங்களை வழ்ங்காது. ரேடார் போன்று கருவிகளை தான் வழ்ங்கி வருகிறது. சொல்ல போனால் திரிகோணமலையில் உள்ள இந்தியன் ஆயில் டாங்கர்களை பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு உள்ளது. அதோடு சிங்கள அரசை ரொம்ப ஒரம் கட்டினால் பாக்கிஸ்தான் இந்த பகுதியில் நிழைந்து விடும். அதனால் சிங்கள் அரசையும் அரவணைத்து போக வேண்டிய கட்டாயம்.
.
.
.

