02-21-2006, 02:12 PM
Quote:நான் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழரையும் தட்ஸ்தமிழில் கேவலமாகப் பேசினேனா? அதற்கு ஏதாவது உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா?உண்மையில் நீங்கள் அப்பிடி பேசியிருக்க கூடாதென்பதே எனது விருப்பமும் கூட! பிரபாகரன் பற்றிய உங்கள் கருத்தினையும் பார்த்தேன். அதுமட்டுமின்றி யாழ் நுலக எரிப்பு தொடர்பான ஒரு பதிவினையும் பார்த்தேன். எனக்குப் புரிவதெல்லாம் உங்களை, உங்களின் நம்பிக்கைகளை, சீண்டும் போது பதிலுக்கு நீங்கள், உங்களுக்கு மனதளவில் உடன்பாடில்லாத விடயங்களை கூட திணித்து பதிலடி கொடுக்க வேண்டுமென்பதற்காக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். இங்கே யார் முதலில் ஆரம்பித்தது யார் இரண்டாவதாக ஆரம்பித்தது என்ற கேள்விகளை விட்டுவிடுவோம்.
நான் நம்மவரை கேட்பதெல்லாம் அவர்கள் இந்தியர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியராக உணர்வதும், நம்புவதும், அவர்களது விருப்பம். அதை உணர்ந்து கொள்ளுங்கள்.
லக்கி ! ஒரு இந்தியராக உங்களுக்கு அயலில் ஈழத்தவரின் நாடு ஒன்று அமைவது உங்களுக்கு மகிழ்ச்சி தானே!
, ...

