02-21-2006, 09:41 AM
லக்கி! ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்தி விடலாம் என முயல்கிறேன். பார்க்கலாம்! லக்கி பல முறை நீங்கள் தமிழ் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவுத்தளத்தில் நின்று எழுதியிருக்கிறீர்கள். அதே நேரம் பல தடவைககள் வேண்டுமென்றே (என்பது அப்பட்டமாக தெரிகிறது) போராட்டத்தினை தூற்றி, போராட்ட செயற்பாடுகளை கேலிசெய்தும் எழுதியிருக்கிறீர்கள். (அவை உணர்ச்சியின் வேகத்தில் கோபத்தின் விளைவில் வருபவை என நீங்கள் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தது போல நினைவு!) நான் உங்களை இந்தியனாகவே பார்க்கிறேன். உங்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், தனியே தமிழ்நாடு கர்னாடாகா என்ற வேற்றுமைகள் இன்ற இந்தியனாக வாழுகின்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதுபற்றி ஒரு முறை புலிகளின் பிரமுகர் சொன்னது நினைவுக்கு வருகிறது. தமிழக மக்கள் மீது இந்திய அரசு குண்டுகளை வீசவில்லை. தமிழக பெண்களை இந்திய அரச இராணும் வல்லுறவு செய்யவில்லை. தமிழக மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் கொண்டுவரப்படவில்லை. ஆகவே தனி தமிழகம் என்ற தேவை அவர்களுக்கு இல்லை. (தமிழீழம் அமைந்தால் தமிழகத்திலும் தனிநாடு கேட்பார்களா என்ற ஒரு கேள்விக்கு இவ்வாறு அவர் சொல்லியிருந்தார்)
ஆனால் எங்கள் நிலைமை வேறு! நாம் ஏதாவது ஒரு வழியில் இலங்கை அரசிடமிருந்து விலகியிருத்தலை தவிர வேறு வழியில்லை என்று ஆகிவிட்டது..
ஒரு இந்தியனாக இதனைப் புரிந்து கொள்ள முடிகிறதா
ஆனால் எங்கள் நிலைமை வேறு! நாம் ஏதாவது ஒரு வழியில் இலங்கை அரசிடமிருந்து விலகியிருத்தலை தவிர வேறு வழியில்லை என்று ஆகிவிட்டது..
ஒரு இந்தியனாக இதனைப் புரிந்து கொள்ள முடிகிறதா
, ...

