Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய
#73
வைகோ பல்டி! மத்திய ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்க அ.தி.மு.க.,நிர்பந்தம்! * நிபந்தனையை ஏற்க மறுத்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு!

எந்தக் கூட்டணியில் சேருவது என்ற குழப்பத்தில் மதில் மேல் பூனையாக இருந்து வந்த ம.தி.மு.க., திடீர் "பல்டி' அடித்து, தி.மு.க., பக்கமே சாய்ந்தது. இதன் பின்னணியில் பல்வேறு நிர்பந்தங்கள் வைகோவுக்கு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

"பொடா' சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ அ.தி.மு.க.,வுக்கு எதிராக திரும்பினார். தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.,வையும் முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தார். பின்னர் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.

இதன் காரணமாக வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ விலக வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கவும் வைகோவின் செயல்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க.,வையும் விமர்சிப்பதை தவிர்த்து அடக்கி வாசிக்கத் துவங்கினார். தி.மு.க., தலைமையை வைகோ விமர்சிக்காத போதிலும் ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விமர்சிக்கத் துவங்கினர். வைகோவின் அணுகுமுறை தி.மு.க., தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., அணியில் பெரிய கட்சிகள் இல்லாததால் அதிக அளவில் தொகுதிகளைப் பெற முடியும் என ம.தி.மு.க., நம்பியது.

எனினும், அ.தி.மு.க., மேலிடம் ம.தி.மு.க.,வை நேரடியாக அழைக்கவில்லை. அக்கட்சியின் சார்பில் காளிமுத்து போன்றவர்கள் தான் அழைப்பு விடுத்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் வைகோ தாமதித்து வந்தார். இந்நிலையில் தி.மு.க., தரப்பில் இருந்து உடனடியாக முடிவைத் தெரிவிக்குமாறு வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்ப்பதை விட, தி.மு.க., கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க.,வில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.,க்களை வெளியேறச் செய்து அந்த கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் ஜெ., பின்னர் காங்கிரசில் இருந்து திண்டிவனம் ராமமூர்த்தியை போர்கொடி துõக்க வைத்து அவர் மூலம் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. காங்கிரசில் இருந்து இன்னும் சிலரை வெளியேற்ற வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில் ம.தி.மு.க.,வையும் தி.மு.க., அணியில் இருந்து பிரித்து தனித்து போட்டியிட வைக்கவே ஆளுங்கட்சி விரும்புகிறது என்றே ம.தி.மு.க., கருதியது.

அதற்கு காரணம், ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இலங்கை தமிழர் விவகாரத்தை பற்றி பேசக் கூடாது என்பதும், மத்திய அரசுக்கு ம.தி.மு.க., அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்பதும் முக்கியமான நிபந்தனைகள். இதுதவிர தொகுதிகள் எண்ணிக்கைøயை கூட்டணிக்கு முன்பாக முடிவு செய்தாலும் எந்தெந்த தொகுதிகள் என்பதை ஜெயலலிதா தான் தீர்மானிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால், அதிக தொகுதிகளுக்காக நிபந்தனைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க., அணியில் சேருவதா அல்லது கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு தி.மு.க., அணியில் இருப்பதா என்று முடிவு எடுக்க முடியாமல் மதில் மேல் பூனையாக வைகோ இருந்தார்.

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால், தேசிய அளவில் எந்த அணியில் சேருவது என்ற கேள்வியும் வைகோவுக்கு எழுந்தது. இதனால் முடிந்தவரை அமைதி காத்து பேரம் பேசலாம் என வைகோ கருதினார்.

இந்நிலையில், இறுதி முயற்சியாக வைகோவுடன் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று காலை தொலைபேசியில் பேசினார். அப்போது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்து அறிவிக்கப் போவதாகவும், அதன் பின் ம.தி.மு.க., வந்தால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிகக் குறைவான அளவில் தான் தர முடியும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், <span style='font-size:30pt;line-height:100%'>\"கடல் கடந்து வந்த ஒரு அறிவுரையும்' </span>வைகோவை தடம் மாற்றியது. இதையடுத்து உடனடியாக தனது முடிவை வைகோ மாற்றிக் கொண்டார். தி.மு.க., அணியில் நீடிப்பதாக "பல்டி' அறிக்கையை அவர் வெளியிட்டார். எனினும், அவரது அறிக்கையில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. காரணம், தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் வரை அ.தி.மு.க., அணியை பகைத்துக் கொள்ள வைகோ விரும்பவில்லை என்பது தான் என, அவருக்கு நெருங்கிய தொடர்புகள் தெரிவிக்கின்றன.
ThanksBig Grininamalar..............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-22-2006, 12:25 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 12:52 PM
[No subject] - by Vasampu - 01-22-2006, 12:55 PM
[No subject] - by cannon - 01-22-2006, 01:30 PM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 02:28 PM
[No subject] - by kuruvikal - 01-22-2006, 02:43 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:13 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:25 PM
[No subject] - by nirmalan - 01-22-2006, 03:25 PM
[No subject] - by cannon - 01-22-2006, 03:26 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:37 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 05:02 PM
[No subject] - by Mathan - 01-23-2006, 06:51 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:39 AM
[No subject] - by Mathan - 01-23-2006, 07:42 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 08:04 AM
[No subject] - by வர்ணன் - 01-23-2006, 08:06 AM
[No subject] - by MEERA - 01-23-2006, 08:49 PM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:40 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:41 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 06:15 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 06:19 AM
[No subject] - by கந்தப்பு - 01-24-2006, 07:05 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 07:08 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 08:16 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 08:25 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 10:36 AM
[No subject] - by Vasampu - 01-24-2006, 01:59 PM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 03:08 PM
[No subject] - by Danklas - 01-24-2006, 03:24 PM
[No subject] - by MEERA - 01-24-2006, 08:38 PM
[No subject] - by kurukaalapoovan - 01-24-2006, 10:26 PM
[No subject] - by அகிலன் - 01-25-2006, 01:03 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:35 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:42 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 04:56 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:58 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 05:12 AM
[No subject] - by Luckyluke - 01-25-2006, 08:46 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 01:57 PM
[No subject] - by வினித் - 01-25-2006, 03:33 PM
[No subject] - by Thala - 01-28-2006, 12:51 AM
[No subject] - by அருவி - 01-28-2006, 02:41 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-01-2006, 01:19 PM
[No subject] - by sinnappu - 02-01-2006, 11:59 PM
[No subject] - by அகிலன் - 02-02-2006, 12:43 AM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 04:49 AM
[No subject] - by Birundan - 02-06-2006, 12:18 PM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 03:07 PM
[No subject] - by Mathan - 02-09-2006, 07:38 PM
[No subject] - by Mathan - 02-13-2006, 08:40 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 08:45 PM
[No subject] - by Thala - 02-18-2006, 09:03 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 09:23 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:34 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:35 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:37 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:41 PM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 06:08 PM
[No subject] - by வடிவேலு - 02-20-2006, 06:44 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:12 PM
[No subject] - by AJeevan - 02-20-2006, 11:04 PM
இத படிங்க முதல்ல...... - by SUNDHAL - 02-21-2006, 08:41 AM
[No subject] - by Luckyluke - 02-21-2006, 01:13 PM
[No subject] - by அகிலன் - 02-21-2006, 03:53 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:16 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:25 PM
[No subject] - by Mathuran - 03-04-2006, 08:21 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-04-2006, 10:13 AM
[No subject] - by வினித் - 03-04-2006, 10:18 AM
[No subject] - by Thala - 03-04-2006, 01:27 PM
[No subject] - by sinnakuddy - 03-04-2006, 06:47 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 09:40 PM
[No subject] - by விது - 03-04-2006, 10:12 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 10:40 PM
[No subject] - by eelapirean - 03-05-2006, 12:18 AM
[No subject] - by adithadi - 03-05-2006, 02:56 AM
[No subject] - by AJeevan - 03-05-2006, 04:21 PM
[No subject] - by tamilini - 03-05-2006, 06:41 PM
[No subject] - by மின்னல் - 03-05-2006, 08:18 PM
[No subject] - by AJeevan - 03-05-2006, 10:30 PM
[No subject] - by கறுப்பி - 03-06-2006, 07:45 AM
[No subject] - by AJeevan - 03-07-2006, 09:06 PM
[No subject] - by sinnakuddy - 03-07-2006, 10:19 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-07-2006, 11:39 PM
[No subject] - by மின்னல் - 03-08-2006, 06:35 AM
[No subject] - by கறுப்பி - 03-10-2006, 04:05 PM
[No subject] - by விது - 03-10-2006, 08:51 PM
[No subject] - by putthan - 03-11-2006, 02:47 PM
[No subject] - by Aravinthan - 03-15-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)