02-21-2006, 05:44 AM
என்னுடைய நிலமை உங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஆனபடியால் நானும் இதில் கூறும் கருத்து ஏற்கமுடிமோ தெரியவில்லை ஏனெனில் சவுதியிலிருந்து வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கும் 1மாதலீவில் தாயகம் போய் வருகிறேன் இப்ப நினைத்தாலும் போயி விடலாம் ஆனால் ஜரோப்பா நாடுகளில் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் பலவிதப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் போய் சேர்ந்திருப்பார்கள் தாயகத்தை பற்றி அறிவிலும் சரி நடப்புகளிலும் சரி ஈழத்தில் உள்ளவர்களை விட அதிகம் தெரிந்து கொள்வதிலும் தெரிந்தும் இருப்பார்கள் ஆனால் இப்பத்தைய போராட்ட சூழ்நிலையில் திரும்பிப் போவார்களா என்பது கொஞ்சம் யோசிக்கவேணும் இளையவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பிய பெற்றோர் தாயகத்தில் இருந்தார்கள் எண்டால் ஒருக்காலமும் தமது பிள்ளைகள் திரும்பி வருவதை விரும்ப மாட்டார்கள் இது முற்றும் முழுக்க சுயநலம் .........ஆனையிறவு தாக்குதலின் போது ஒரு பெரியவர் 5பிள்ளைகளையும் இந்திய ஆமி காலத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டவர் சொல்கிறார் "எங்கடை பெடியள் விட மாட்டாங்கள்" எண்டு இப்பிடி சுயநலத்திதுடன் இருப்பவர்கள் தமது பிள்ளைகள் வர அனுமதிப்பார்களா???? நாட்டில் முதலில் அமைதியான நிலை ஏற்பட கடவுளிடம் பிராத்தியுங்கோ.....நீங்க திரும்பிப் போவதை விட அங்கு இருப்பவர்களாவது நிம்மதியாக இருக்கவேண்டாமா..........(ஏற்கனவே யுத்தநிறுத்த காலத்திலை ஊருக்குப் போய் கிடந்த காணி வீடுகளின்ரை விலையை உயத்திவிட்டது காணாதா.........? அங்கை உழைக்கிறவன் தலையிலை கை வைச்சுக் கொண்டிருக்கிறான் )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

