02-03-2004, 10:18 PM
நான் எழுதினது அகதிகளாக வந்தவர்களையும் அவர்களது பிள்ளைகளையும்பற்றி. விரிவாக எழுதாமைக்கு மன்னிக்கவும்.. ஏனெனில் ஜேர்மனியில் 99வீத தமிழர் அகதிகள் என்ற எண்ணத்தில் அதை கவனிக்கத் தவறிவிட்டேன். அகதியாக விசாவில் உள்ள ஒருவருக்கு குழந்தை பிறந்தாலே.. உடனே அந்த குழந்தைக்கு அகதித் தஞ்சம் கோரவேண்டும். அது ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதுமாக முடிவுகள் வரும்.. இது எந்த ரீதியில் என்பது எனக்கு இதுவரை விளங்கவிலலை. ஆக, அகதி விசாவிலுள்ளவர்களின் வாரிசுகளும் அகதிகளாகவே கணிக்கப்படுகிறார்கள். அதேபோல, அகதியானவர்களும் நேரடியாக மாணவ விசாவில் வருபவர்களும் வேறுவிதமாகவே நடாத்தப்படுகிறார்கள். அகதி விசாவில் இருப்பவர்கள் எந்நேரமும் திருப்பி அனுப்பப்படுபவர்களாகவே நோக்கப்படுகிறார்கள். அந்த ரீதியிலேயே ஒவ்வொரு விடயமும் அவர்களைக் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.
Quote:நிரந்தர வதிவிட உரிமை இருந்தால்த்தான் படிக்க விடுவோம் என்று கூறியதாக நீங்கள் எழுதியது வேடிக்கையாக இருக்கிறது..ஏற்கெனவே ஒவ்வொரு காரணத்துக்காக விசாக்களை நீடித்த சம்பவங்கள் நிறையவே உண்டு. உதாரணமாக, நாட்டுக்கு அனுப்பப்படும் 'சிங்' இனத்தவன், தனது தாடி வளரும்மட்டும் நாட்டுக்கு போக முடியாது எனக் காரணம் கூறி விசா நீடித்து நாடு மாறுவதுபோல பல சம்பவங்கள் உண்டு. அதனால், திருப்பி அனுப்பப்படுபவன் அதைத் தாமதப்படுத்துவதற்காக முன்வைக்கும் காரணங்களைத் தடுப்பதிலேயே இவர்கள் குறியாக உள்ளார்கள். பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்தால் இதைக் காட்டியே விசா நீடிப்பு பெறலாம் என்பதால், ஆரம்பத்திலேயே விசா இருந்தால்தான் பல்கலைக்கழக அனுமதி என்று கூறியிருக்கலாம்.
.

