02-20-2006, 11:04 PM
<b>ம.தி.மு.க. அணிமாறவில்லை - வைகோ அறிவிப்பு</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/02/20060220153932vaikokarunanidhi203.jpg' border='0' alt='user posted image'>
வைகோவுடன் கருணாநிதியும், தயாநிதி மாறனும்
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றிபெறச் செய்வதே மதிமுகவின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வைகோவின் இன்றைய அறிவிப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வரவேற்றுள்ளார்.
ம.தி.மு.க. அணி மாறுமா என்பது தொடர்பில் நீடித்துவந்த சந்தேகங்களுக்கும் சர்ச்சசைகளுக்கும் இதனால் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் திமுகவை சாடிப் பேசிவந்துள்ளதை குறிப்பிடும் முகமாக, மதிமுகவின் தலைவர்கள் சிலரின் பேச்சு திமுகவை நோகடித்திருந்தால் அதற்காக வருந்துவதாகவும் வைகோ இன்றைய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-BBC tamil