02-03-2004, 04:34 PM
அட கடவுளே நீங்கள் எல்லாம் எந்த உலகத்திலை இருக்கிறியள்.. சம்பந்தப்பட்டவையிற்றை விசயத்தை கேட்டன். படம் போட்போற நோட்டீஸ் விட்டு பல மாதங்களாகிவிட்ட நிலையில் நிகழ்ச்சிக்கு முதல்நாள் போடவேண்டாம் எண்டு ஒருத்தரும் இல்லை இது என்றை எண்டு இன்னொருத்தரும் அடிபடுகினம். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்pறர்களிடம் முன்னரே நிறுத்தச் சொல்லாது கடைசி நெரத்தில் சொன்னதன் மர்மம் எனக்கு தெரியாது. மற்றது இன்னுமொரு வியம் நம்மட படங்கள் எண்ட உடனை சனம் வந்து குவியுது தானே.. கேட்டாலே மைல் தொலைவுக்கு ஓடுறாங்கள். தங்கடை பணத்தை செலவு செலவு செய்து மற்றவையி;றை படங்கள் மற்றவையிடம் பேய் சேர வேண்டு மெண்டு நினைத்தவர்கள் ஒரு போதும் குளிர்காய்பவர்கள் இல்லை. லண்டனில் படமெடுத்த பல கலைஞர்களை அந்த மேடையில் தமது சொந்த காசில் கௌரவிhத்து அவர்களின் படங்களில் இருந்து சில பகுதிகளை போட்டுக் காட்டி நமது படைப்புகள் வெகுவிரைவில் நம்பிக்கை தரும் என்று நம்பிக்கை ஊட்டியவர்கள் எங்களுக்கு பூச்சாண்ட காட்டுபவர்கள். தேசம் பத்திரிகை தாம் ஒழுங்கு செய்த நிகழ்வில் படமாக்கிய படங்களை மக்கள் இலவசமாக பாரக்கட்டும் என நினைத்தது தவறாயிருக்கலாம். ஆனால் அன்றைய நிகழ்வில் இலவசமாக இவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொடுத்தவர்கள் முகமூடி போட்டவர்களா? காலம் பதில் சொல்லும். அன்று அதைக்காட்டி அவர்கள் பணம் உழைத்திரந்தால் உங்கள் கேழ்விகள் நியாயமானதே. ஆனால் அந்த நிகழ்ச்சியே ஈழ மக்களின் திரை வளர்ச்சி பற்றிய உரு விளம்பரமே. இதில் அஜீவன், சண், கீர்;த்தி போன்ற கலைஞர்களை 400க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்த அவர் தம் செய்ற்பாடுகளை அங்கெ வெளிக் கொணரந்தவர்கள் புலுடா விடுபவர்கள் என்றால் நான் என்ன செய்ய.. அன்று போடப்பட்ட படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அத்துடன் அதை தயாரித்த அனைத்து கலைஞர்கள் பலரை அன்றுதான் பலர் அறித்தும் கொண்டனர். இந்த அறிமுகத்தை இலவசமாக செய்தவர்கள் நிச்சயம் கோமாளிகளே... தன்னலங்க கருதாது அடுத்தவர் படைப்பும் வரவேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை குளிர் காய்வதே..
நன்றி வணக்கம்.
நன்றி வணக்கம்.

