02-03-2004, 03:55 PM
Quote:படம் போட்டது தேசம் பத்திரிகை. போடா விட்டால் ஈழவர் படைப்பை ஊக்குவிக்க மறுத்ததாக அவர் எழுதுவார். நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சி யாரும் பணம் பண்ண போடவில்லை. மாறாக ஈழவர் படைப்புகளை மக்கள் முன்னிலையஜில் கொண்டு வரவே இந்த படங்கள் போடப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்நல்லாதான் புலுடா விடுறீர்.. வேண்டாம் இந்த பசப்பு .. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி.. அவர்கள் வேண்டாம் என்று கூறிய பின்னரும்.. தமது வெளியீடு எனப் போடுவதா ஈழக் கலைஞரை முன்னிலைப்படுத்தும் செயல்.. மற்றவனின் உழைப்பிலும் வியர்வையிலும் குளிர்காய நினைக்கும் போக்கிலித்தனமான செயல் இது.. இப்படி மற்றவனின் முகத்துக்கு தனது முகத்தை முகமூடியாக்கி மகிழும் 'தேசம்' நிறுவனத்தினர் கண்டிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் தமது தவறுக்காக சம்பந்தப்பட்டவர்களிடம் ஆகக் குறைந்தது மன்னிப்பாவது கேட்க வேண்டும்.
போராட்டப் பாடல் போட்டவனெல்லாம் நாட்டுப்பற்றாளன்... மற்றவன் உழைப்பில் குளிர்காய்பவன் ஈழக் கலைஞரை ஊக்குவிப்பவன்.. இந்த பூச்சாண்டி விளையாட்டுகள்தான் பல இடங்களில் நடக்கின்றன.. இனியாவது இதுகளை நிறுத்தி உங்கள் சுயங்களை வெளிக்கொணரப் பாருங்கள்.
.

