02-03-2004, 03:28 PM
Quote:என்னடா இது படிக்க விரும்பிற றிபியூஜி பிள்ளையளுக்கு ஓடி ஓடி அரசாங்கம் எல்லா உதவியளும் செய்யுது.. நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள்.. யாரையப்பா நம்பிறது..?படிப்பதற்கு அரசாங்கம் உதவி செய்கிறது. ஆனால் படிக்கும் காலம்வரை அவர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கேற்ற பத்திரங்களை எதிர்பார்க்கிறது... அதாவது காலவரையற்ற விசாக்களை. ஜேர்மனியில் ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொருவிதமான நடைமுறைகள் உள்ளன. இன்று ஸ்கன்டிநேவியன் நாடுகளிலே பலரும் அந்நாட்டு மொழியறிவு உள்ளவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம், சலுகைகள் பெற வேண்டுமாயின் மொழியைக் கற்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டமை. ஆனால் ஜேர்மனியில் விரும்பினால் மொழியைக் கற்றுக் கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம். இதனாலேயே பெருமளவு மக்கள் மொழிவளம் குன்றியவர்களாக உள்ளார்கள்.
Quote:பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கவில்லை என்பதற்காக குடிப்பதும் கவலையோடு அலைவதும் முழு மூடத்தனம்...அவன் டொக்டர் இவர் இஞ்சினியர்...அவற்ற மகள் பட்டதாரி இவற்ற மகன் எக்கவுண்டன்...இவை ஒரு தனிமனித ஆளுமையை வளர்க்க உதவாது...இதற்காகத்தான் பல்கலைகழகக் கல்வி என்றால் இக்குறிப்பு அப்படிப்பட்ட வார்த்தை உச்சரிப்புகளுக்காக படிக்கும் நவகால முழு மூடர்களுக்காக எழுதவில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்....!குருவிகள்! நீங்கள் தாயகத்தில் பலவித அனுபவங்களைப் பெற்று வந்தவராக இருக்கலாம். ஆனால் இங்கு வளரும் குழந்தைகளின் போக்கு அனேகமாக நேர்கோடு போன்றது. அதுவும் எமது பிள்ளைகளுக்கு வெளிநடமாட்டம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. பள்ளி தவிர படிப்பும் ரீவியும் கணனியும் கேம்போயும்தான் அவர்களின் நேர விழுங்கிகள்.
அத்துடன் வெளியில் பல்வேறு இன இளைஞர்களுடன் பழகினாலும், பெற்றோரின் விருப்புக்கேற்ப பலதைத் துறந்துதான் படிக்கிறார்கள். ஆகவே இப்படி ஒருவழிப்பாதையில் செல்பவர்களுக்கு, அவ்வழியில் எதிர்பாராத விபத்து நேரும்போது பலவித அதிர்ச்சிகள் குழப்பங்கள் பாதிப்புகள் வருவது இயல்பு. விரைவாகச் செல்லும் வாகனத்தின் குறுக்கே எதிர்பாராமல் ஒரு வாகனம் வந்தால் விபத்து நிகழும்தானே?!
.

