02-20-2006, 04:52 PM
Luckyluke Wrote:AJeevan Wrote:நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது.
இருந்தாலும் ராஜீவ் காந்தி பற்றி வருவதால் இதை எழுதுகிறேன்.
கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பெப்பரவரி 12ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன்.
அதிக நாட்களை சென்னையில் கழிக்க வேண்டியிருந்தது.
அப்போது ராஜீவ் கொல்லப்பட்ட இடத்துக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன்.
இடங்களை பார்த்த பின் நான் கருத்து எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது அம்பத்தூரிலிருந்து என்னோடு வந்த நண்பன் சொன்னான்.
"ராஜீவ் இங்க செத்ததாலதான் இந்த பகுதியே முன்னேறிச்சு.
வருடத்துக்கு ஒரு முறை நினைவு நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடக்கிறதால இந்தப் பகுதியின் வளர்ச்சி எதிர்பாராத ஒரு அதீத வளர்ச்சியாகிடுச்சு"
"சில கெடுதல்களில் கூட பல நன்மைகள்" என்றான் அடுத்தவன்.
நான் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.
அஜீவன் அண்ணா,
சத்தியமாக நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.... யாரோ பாமரத்தனமாக சொன்னதை இங்கு சொல்கிறீர்களே, மற்றவர்கள் எப்படி பொருள்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?
<b>இது அங்கு வாழும் ஒருவருடைய கருத்து மட்டுமே.
அவர் ஓர் முன்னால் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று வேறோர் கட்சியில் இருப்பவர்.........</b>
(பெயர்களை எழுத முடியவில்லை. காரணம் அவர்கள் அரசியலால் வாழ்பவர்கள்.)
தவிரவும் அங்கு அரச அலுவலங்களில் சில வேலைகள் நிமித்தம் சென்றேன்.
என்னை வெறுக்க வைத்தது.
லஞ்சத்தின் உச்சம்.
கவனயீனம் மற்றும் சட்டை செய்யாத நிலை.............
நான் சொன்னேன்
அப்துல்கலாம் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று தவறாக சொல்லி விட்டார்.
அவர் சாதாரண ஒருவனாக வந்தால் உண்மை நிலை புரியுமென்று .............
அதற்கு அந்த அதிகாரி முறைத்து சத்தமிட்டார்.
நான் மீண்டும் அவரிடம் சொன்னேன்.
ஐயா
காந்தி இந்தியாவை அமைதி தேசமாக உருவாக்க பாடுபட்டார்.
நம்பினார்.
ஆனால் இன்றும் அது கனவு மட்டுமே.
அது போல இதுவும் அப்துல்கலாமின் கனவு மட்டுமே என்றேன்.
அவர் உறும முயன்ற போது.........
என்னோடு வந்தவர்
அரசிலில் ஒரு முக்கிய புள்ளி.
அவர் அவரை பேசவிடாது தன்னை அடையாளம் காட்டிய பின்னர் மெளனமானார்.
<b>காரணம்</b>
இந்தியாவிலிருந்து ஒருவர் தொழில் விடயமாக
சுவிஸுக்கு வர வேண்டி றெட்சீல் பண்ணிக் கொடுக்கும் படி கோட்டையில் கையளித்த சான்றிதழை தான்தோன்றித்தனமாக தொலைத்து விட்டு தெரியாது என்று சொன்னதே.
பின்னர் அங்கு வேலை செய்யும் பியூன்
அதைக் கிழித்து ஏதோ எழுதியிருப்பது தெரிய வந்தது.
பின்னர் மீண்டும் ஒரு பிரதி கொண்டு வந்து 5000 ரூபா லஞ்சம் கொடுத்த பின் ஓகேயானது.
இவைகளை தனியாக எழுதவிருக்கிறேன்.
பொறுத்திருங்கள்...................

