02-20-2006, 04:31 PM
AJeevan Wrote:நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது.
இருந்தாலும் ராஜீவ் காந்தி பற்றி வருவதால் இதை எழுதுகிறேன்.
கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பெப்பரவரி 12ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன்.
அதிக நாட்களை சென்னையில் கழிக்க வேண்டியிருந்தது.
அப்போது ராஜீவ் கொல்லப்பட்ட இடத்துக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன்.
இடங்களை பார்த்த பின் நான் கருத்து எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது அம்பத்தூரிலிருந்து என்னோடு வந்த நண்பன் சொன்னான்.
"ராஜீவ் இங்க செத்ததாலதான் இந்த பகுதியே முன்னேறிச்சு.
வருடத்துக்கு ஒரு முறை நினைவு நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடக்கிறதால இந்தப் பகுதியின் வளர்ச்சி எதிர்பாராத ஒரு அதீத வளர்ச்சியாகிடுச்சு"
"சில கெடுதல்களில் கூட பல நன்மைகள்" என்றான் அடுத்தவன்.
நான் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.
அஜீவன் அண்ணா,
சத்தியமாக நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.... யாரோ பாமரத்தனமாக சொன்னதை இங்கு சொல்கிறீர்களே, மற்றவர்கள் எப்படி பொருள்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?
,
......
......

