02-20-2006, 04:31 PM
Quote:சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே....ம்.. புலிகிள்ன கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழைகின்ற போது இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் தனியாக விசாரணை செய்யப்படுகின்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் ஒருவித பாதுகாப்பு உணர்வுடன் அணுகப்படுகின்றார்கள். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லையென்பதை நிங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய புலனாய்வுப் பிரிவு -இலங்கை அரசுடன் இணைந்து என்று சொல்ல முடியாவிட்டாலும்-- தனியாக தனது கடமையைச் செய்த கொண்டுதானிருக்கிறது. புலிகளும் ஒரு நாடு இதனை எவ்வாறு அணுகுமோ அவ்வாறு அணுகுகின்றார்கள்.
ஆனால் இந்திய மருத்துவர்கள் சுனாமியின் போது திருப்பியனுப்பபட்டது குறித்து நான் அறியவில்லை. சரியாகத் தெரியாமல் அந்த மருத்தவர்கள் உளவாளிகள் என்றோ, அல்லது புலிகள் அவ்வாறு செய்யவில்லை என்றொ நான் பேச முடியாது. அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை நேரடியாக செய்திருந்தது. மகிழ்ச்சி
, ...

