02-20-2006, 04:07 PM
காவடி Wrote:Quote:இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது....இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்... இலங்கை இந்தியாவுக்கு எதிரி நாடே என்று வைத்துக் கொள்வோம்... ஆனாலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவதால் தான் திரிகோணமலையில் 20 வருடங்களுக்கு முன்பே வரவேண்டிய அமெரிக்க ராணுவ கேம்ப் இன்றும் வரவில்லை (அது வந்தால் புலிகளுக்கும் தலைவலி என்பது வேறு விஷயம்... இதற்காக புலிகள் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்) அது வந்து விட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் இடையூறாக இருக்கும்... இந்தியாவின் ஐஓசி டேங்க் திரிகோணமலையில் இருக்கிறது... அமெரிக்காவின் கேம்பால் அதற்கும் இடையூறு வரலாம்.... இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றே ஒன்று தான்... அது 'இந்திய மக்களை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்பது' என்பது தான்....
ராசீவ் மரணத்தை நாங்கள் மறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.... ஏன் அமைதிப்படையையும் அதுபோல் நீங்கள் மறந்து விடுங்களேன்......
அதிருக்கட்டும்... இந்தியாவின் ஆதரவைப் பெற இதுவரை புலிகள் ஏதாவது முயற்சி மேற்கொண்டிருக்கிறார்களா என்ன? இந்தியா அழையா விருந்தாளியாக வந்து உங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமா?
,
......
......

