02-20-2006, 03:58 PM
Quote:யோவ்... அதுதானே நானும் சொன்னேன்... யதார்த்தத்தை உணர்ந்து சாரு கருத்து தெரிவித்திருக்கிறார் என்று.....
மிஸ்டர் Luckyluke.
சாரு நிவேதிதா எழுதியதி என்னால் ஏற்று கொள்ள் முடியாது அவரின் பார்வையில் ஈழத்தமிழர் எல்லோரும்
சுகபோகவாழ்வில் மயங்கி கிடக்கிறர்கள் என்பதை சொல்லி இருக்கிறார், ஆனால் அது அல்ல உண்மை அவர் அப்படி எழுதியதுக்கு காரணம் அவரின் சில நன்பர்கள் இவர்கள் யார் என்று பார்திர்கள் என்றால் ஈழத்தில் ஏதோ ஒரு விதமாக அங்கு உள்ள அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டு தான் இங்கு வந்து இருக்கினம் அப்படி பட்ட ஒரு சில தமிழரின் மனநிலையை வைத்து 8 லட்சத்துக்கு மேல் உள்ள மற்ற ஈழத்தவரி எடை போடுவது ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல .............
நான் ஒரு இந்தியன்னாய் இருந்து சொல்வதால் உம்மால் இதை ஏற்று கொள்ள முடியுமா என்று தெரியவில்லை
நான் திருச்சியில் ஆயிரகனக்கான ஈழதமிழரை பார்த்து இருக்கேன் அவர்களின் உறவினர்கள் ஜரோப்பாவில் இருந்து வந்து இருந்தார்கள், அவர்களின் மனநிலைப்படி பிரச்சனை இல்லாட்டி யாழ்ப்பாணம் மாதிரி தங்களுக்கு வாரது என்று கூறும் போது அவர்களின் ஈழப்பற்றையும் ஊர் பற்றையும் புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது...

