02-20-2006, 03:56 PM
Quote:நான் அப்படி நினைக்கவில்லை... பொதுவாக பேச்சுவார்த்தைகளில் எல்லாம் கூட முரண்டு பிடிப்பது புலிகளின் வழக்கமாக இருக்கிறது..... எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே இறங்கி வர வேண்டும் என்று புலிகள் நினைக்கிறார்கள் போலிருக்கிறதுநாளை நடைபெற போகின்ற பேச்சுவார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அதாவது யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற இருக்கின்றன. யுத்தநிறுத்த விதிமுறைகளில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன.
1) இராணுவத்தோடு இயங்கும் துணைஇராணுவக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும்.
2)மக்களின் வாழ்விடங்களில் அவர்களது காணிகள் வீடுகளில் இராணுவம் உட்கார்ந்திருக்கிறது. மக்கள் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். அந்த இராணுவத்தினர் தமது பிரதான முகாம்களுக்கு திரும்ப வேண்டும் - (உங்களுக்காக ஒரு குறிப்பு - அவ்வாறு விட்டுப்போன இடங்களுக்கு புலிகளின் இராணுவம் செல்லமுடியாது)
இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏதோ புலிகள் முன்வைத்த அல்லது முன்வைக்கப் போகும் நிபந்தனைகள் அல்ல. இவை சரியாக 4 வருடங்களுக்கு முன்னர் புலிகளும் அரசும் செய்த உடன்படிக்கையில் இருதரப்பும் ஏற்றுக்கொண்ட விடயங்கள். ஆனால் 4 வருடமாகியும் இன்னமும் இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மக்களின் வீடுகிளிலிருந்தும் அவர்களின் வயல்களிலிருந்தும் இராணுவத்தை எழுந்த அவர்களுக்கான முகாம்களுக்குள் போகச்சொல்வது நிபந்தனையா? தவிர இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட விடயமும் தானே..
பேச்சுவார்த்தைகளில் புலிகள் இதை வலியுறுத்துவார்கள்.. இதில் என்ன விட்டுக்கொடுப்பைச் செய்ய முடியும்?
, ...

