02-20-2006, 03:46 PM
Quote:இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது....இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.
, ...

