02-20-2006, 03:44 PM
Quote:இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது....இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.
அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.
இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்
இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.
அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.
http://thamizhsasi.blogspot.com/2005/11/1.html
, ...

